jio announces few more offers and can extend upto 18 months
ஜியோவின் சலுகைகள் அடுத்த 18 மாதங்கள் நீளும்....குறைந்த கட்டண சலுகை விரைவில் அறிமுகம்...
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. கடந்த 6 மாத காலமாக இலவச டேட்டா சேவையை வழங்கி வந்த ஜியோ, தற்போது கால அவகாசத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பிறகு, கட்டண சேவை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது .
இந்நிலையில் ஜியோவிற்கு எதிராக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், ஜியோவை போன்றே பல சலுகைகளை அறிவித்து வருகிறது .அதாவது ஜியோ கட்டண சேவை தொடங்கும் தருவாயில், ஐடியா பிஎஸ்எனஎல் ,ஏர்டெல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் இலவச சேவையை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொறுமையாக கவனித்து வந்த ஜியோ, இலவச சேவையை மேலும் மூன்று மாதத்திற்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜியோ மிக குறைந்த கட்டணத்தில் அடுத்து வரும் 12 முதல் 18 மாதம் வரை சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
