மனிதாபிமானம் இன்னும் கூட மரித்து விடவில்லை நம் பூமியில் என்பதை அவ்வப்போது சிலர் அவர்களையும்ம் அறியாமல் பிறருக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். 

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுவதுதே மனிதாபிமானம். மனிதன் சக மனிதனின் மீது காட்டும் பரிவும், இரக்கமும் கலந்த உணர்வு. அப்படி ஒரு உணர்வை பாசாங்கில்லாமல் சக மாணவன் மீது காட்டும் இந்த பார்வையற்ற சிறுவனின் வீடியோ பார்ப்பவர்களின் மனங்களை சிலிர்க்க வைக்கிறது. கண்பார்வையற்ற மாணவன் ஒருவன் உணவை எடுத்து சாப்பிட முடியாத நிலையில் சக கண்பார்வையற்ற மற்றொரு மாணவன் தானும் சாப்பிட்டுக் கொண்டே மற்றொரு மாணவனுக்கும் ஓட்டி விடுகிறான். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பசியில் பாசத்தை பகிரும் இந்த குணம் தான் உண்மையான மனிதாபிமானம் என அந்த சிறுவனின் செயல்பாட்டை வாழ்த்தி வருகின்றனர். இந்த வீடியோயை பார்ப்பவர்களின் மனதிற்குள் பிறருக்கு உதவும் குணத்தை உந்தித்தி தள்ளுகிறது. 

 

இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீரகும் பார்வையற்றவர்கள் பள்ளி மாணவர்கள் எனக் கூறப்படுகிறது. 1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப்பள்ளியில் இப்போது 500க்கும் மேற்பட்ட பார்வையற்ற சிறுவர்கள் பயின்று வருகின்றனர்.