எக்கனாமி வகுப்பில் இஸ்ரோ சிவன் பயணம் ... க்யூவில் நின்று முட்டி மோதி செல்பி... சினி ஸ்டாரை விட ரியல் ஹீரோக்கு கிடைத்த மாஸ் என்ட்ரி ..!  

இன்டிகோ விமானத்தில் எக்கனாமி வகுப்பில் பயணம் செய்த இஸ்ரோ தலைவர் சிவனுடன் விமான பணிப்பெண்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சந்திரயான்-2 சமீபத்தில் நிலாவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காகவும், நிலவின் மேற்பரப்பு மற்றும் மற்ற முக்கிய ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன்-2 அனுப்பப்பட்டது.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-2 செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே மூன்று முக்கிய நிலைகளை கடந்து நான்காவது நிலையை வெற்றிகரமாக அடைந்த சந்திரயானின் லேண்டர் விக்ரம், நிலவில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டதால் அனைவர் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் 80 சதவீத ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்பதால் இந்த ஒரு பயணம் 85% வெற்றி பெற்றதாகவே கருதப்பட்டது.

இருந்தாலும் லேண்டர் நிலவின் மேற்பரப்பை அதாவது நிலவின் தென்துருவத்தில் நிலை நிறுத்த முடியவில்லை என்பதற்காக இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஆறுதல் தெரிவித்து இருந்தார். அந்த தருணத்தில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் இஸ்ரோ சிவனுக்கு பெருத்த ஆறுதல் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். மிகவும் எளிமையான மனிதரான இஸ்ரோ சிவன் அவருடைய கல்லூரி படிப்பின் போது தான் முதல் முறையாக முழுக்கால் பேண்ட் அணிந்து உள்ளார். கல்லூரிக்கு செல்லும்போது கூட வேஷ்டி சட்டை அணிந்து செல்பவர்.

தற்போது இஸ்ரோ தலைவராக பெரும் பொறுப்பில் இருந்தாலும் இன்றளவும் அவரிடம் எளிமை உள்ளது என்பதை நிரூபணம் செய்யும் விதமாக அமைந்துள்ளது இவரின் இந்த விமான பயணம். காரணம்... இன்டிகோ விமானத்தில் பயணம் செய்ய எக்கனாமி வகுப்பை தேர்வு செய்துள்ளார் இஸ்ரோ சிவன்.

நடுத்தர மக்கள் பயணம் செய்ய இந்த வகுப்பை தான் தேர்வு செய்வார்கள். இஸ்ரோ சிவன் நினைத்திருந்தால் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்து இருக்கலாம். ஆனால் சாதாரணமாக எக்கனாமிக் வகுப்பை தேர்வு செய்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் இஸ்ரோ சிவனை பார்த்தவுடன் ஆரவாரமாக வாழ்த்துக்களை தெரிவித்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் விமான பணிப் பெண்களும் ஆர்வமாக இஸ்ரோ சிவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதுவரை விமானத்தில் எந்த ஒரு மிகப்பெரிய நடிகர் பயணம் செய்தாலும் இந்த அளவிற்கு விமான பணிப்பெண்கள் மற்றும் மக்கள் வரவேற்பு கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்வது என்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இஸ்ரோ சிவனை அனைவரும் ஒரு உண்மை ஹீரோவாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது அதில் குறிப்பாக, ஒரு தமிழனாக... சாதித்துக் காட்டிய ஓர் உண்மை கதாநாயகனாக வலம் வருகிறார் இஸ்ரோ சிவன் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாத