Asianet News TamilAsianet News Tamil

முந்துங்கள்..! ஈஷாவில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா..! பிப்.18 – 20 வரை கோலாகலம்..!

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈஷாவின் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
 
isha foundations yasha celebration from february 18th to upto 20th
Author
Chennai, First Published Feb 17, 2020, 3:30 PM IST

முந்துங்கள்..! ஈஷாவில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா..!  பிப்.18 – 20 வரை கோலாகலம்..! 

பாரத கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக இசை, பாட்டு மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் கூடிய ‘யக்ஷா’ கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈஷாவின் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, மஹாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் நடக்கும் ‘யக்ஷா’ திருவிழாவில் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களுக்கு கலை விருந்து படைக்க உள்ளனர். கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தவும், தேர்ந்த கலை ரசிகர்கள் பாரம்பரிய கலைகளை கண்டு களிப்பதற்கும் இது ஒரு சிறந்த மேடையாக விளங்குகிறது.

isha foundations yasha celebration from february 18th to upto 20th

18-ம் தேதி திருமதி.கலா ராம்நாத்தின் இந்துஸ்தானி வயலின் இசை நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஹைதராபாத் சசோதரர்கள் என அழைக்கப்படும் திரு.சேஷாச் சாரி மற்றும் திரு.ராகவாச் சாரி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், 20-ம் தேதி திருமதி.ஷர்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் சூர்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும்  மாலை 6.50 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம். மேலும், பாரம்பரிய துணி ரகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

isha foundations yasha celebration from february 18th to upto 20th

21-ம் தேதி மஹாசிவராத்திரியன்று வருகை தரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios