Is this Simdemlam you like? You fell in love
உலகத்துல நிறைய பேர் காதல் கல்யாணம் செய்துருப்பாங்க.. ஆனா அவங்ககிட்ட எப்போ நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சீங்கன்னு கேட்டா தெரியாது சொல்றவங்க தான் அதிகம்.
ஏன்னு தெரியல திடீர்ன்னு பிடிக்க ஆரம்பிச்சது. உடனே லவ் சொல்லிட்டேன்னு பெரும்பாலானோர் பதில் சொல்லுவாங்க.
ஆனால் இந்த சிம்டெம்ஸ்லாம் உங்களுக்கு வருதுன்னு தெரிஞ்சாலே போதும். நீங்கள் காதல் வசப்படுறீங்கன்னு தான் அர்த்தம்.
அது என்ன சிம்டெம்ஸ்ன்னு கேட்குறீங்களா...! இதோ டிப்ஸ் உங்களுக்காக...!
1. காதல் வந்துட்டாலே உங்கள் முகத்தில் ஒரு பளபளப்பு தெரியும்.
2. காதல்ல விழுந்தவங்க சம்பந்தமே இல்லாம உளற ஆரம்பிச்சிடுவாங்களாம்.
3. வகை வகையா உணவு செய்து கொடுத்தாலும் பசியே எடுக்காதாம். ஆனால் மனசு நிறைஞ்சி இருக்குமாம்.
4. கண்ண மூடினா கூட தூக்கம் வராதாம். கனவு தான் வருமாம்.
5. எப்போவும் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு புன்னகை உதட்டில் தாண்டவம் ஆடிக்கிட்டே இருக்குமாம்.
6. அதுவரை பெரிய பேச்சை கேட்காதவங்க கூட ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்திப்பாங்களாம். அதாங்க பெரியவங்களிடம் மரியாதையா நடந்துப்பாங்களாம்.
7. நண்பனை ஓரங்கட்டிட்டு கண்ணாடியை நண்பனாக்கிக்குவாஙகளாம்.
8. டிரஸ்கூட செம்மையா பண்ண ஆரம்பிச்சிடுவாங்களாம்.
9. சின்ன சின்ன குறும்புத்தனமான பழக்கவழக்கங்கள் தோண்றுமாம்.
10. நைட் தூக்கத்தை விட ஒரே லவ் சாங்ஸ் தான் கேட்க பிடிக்குமாம்.
11. தனிமையாதான் இருக்கணும்ன்னு தோணுமாம்.
12. அதுவரை கேட்காத பிரண்ட்ஸ் லவ் பத்திலாம் ஆர்வமா கேட்டு தெரிஞ்சிப்பாங்களாம்.
