தினமும் தலைக்கு குளிச்சா முடி அதிகம் கொட்டுமா..? உண்மை என்ன..?
Daily Hair Wash : தினமும் தலைக்கு குளிப்பது உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, அது வறட்சியை உண்டாக்கும்.
முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முடி உதிர்தல், ஒட்டு முடி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பல பிரச்சனைகள் இதில் அடங்கும். இது போன்ற முடி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட சிலர் தினமும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கியுள்ளனர்.
ஆனால், தினமும் தலைக்கு குளிப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதனால் முடிக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா? என்ற கேள்வி பலருக்கு உண்டு. அதைப்பற்றி இப்போது இந்த பதிவில் நாம் விரைவாக தெரிந்து கொள்ளலாம்.
தினமும் தலைக்கு குளிப்பது முடி உதிர்வை ஏற்படுத்துமா?
கோடை காலமோ அல்லது குளிர்காலமோ தலைக்கு தவறாமல் குளிப்பது நல்லது. இதனால் முடியின் ஒட்டும் தன்மை நீங்கும் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையும் குறையும். மேலும் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் தலைக்கு குளிப்பது நல்லதல்ல. தினமும் தலைக்கு குளித்தால் அது உச்சந் தலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக உச்சந் தலையில் அதிக வறட்சி ஏற்படுவதுடன், முடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக மாறும்.
இதையும் படிங்க: உங்களுக்கு நைட்ல தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ முதல்ல 'இத' கட்டாயம் படிங்க..
வாரத்திற்கு எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும்?
ஒரு நபரின் முடிவகை மற்றும் முடியின் அடர்த்திய பொறுத்து தலைக்கு குளிக்க வேண்டும். உதாரணமாக, சுருள் முடி உள்ள நபர் வாரத்திற்கு, 3-4 நாட்கள் ஒரு முறை தலைக்கு குளிக்கலாம். எண்ணெய் பசை உள்ள முடி உள்ள நபர் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குளிக்கலாம். மெல்லிய மற்றும் நேரான முடி இருக்கும் நபர், தலைமுடி அழுக்காக இருக்கும் போது தான் தலைக்கு குளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: வெந்தயத்தை கூந்தலில் 'இப்படி' யூஸ் பண்ணுங்க... முடி வேகமாக வளரும்!
தலைக்கு குளிக்கும்போது இந்த விஷயங்களை கவனிங்கள்:
1. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது உங்கள் முடி எந்த வகை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. மேலும் அதிக ரசாயனங்கள் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துங்கள்
3. தலைமுடியில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் ஷாம்புவை மட்டுமே பயன்படுத்துங்கள்.
4. நீங்கள் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் முன் உங்கள் தலைமுடிக்கு என்னை தடவுவது நல்லது இது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
5. தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பிறகு கண்டிஷனரை கட்டாயம் பயன்படுத்துங்கள். ஏனெனில், கண்டிஷனர் முடி உடைவதை தடுக்கிறது.
6. உங்களுக்கு அதிக ஷாம்பு போடும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். அதிக ஷாம்பு முடியை சுத்தமாகாது. எனவே, ஒரு துளி அளவுகளில் மட்டுமே ஷாம்புவை பயன்படுத்துங்கள். போதவில்லை என்றால் மீண்டும் கூட எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த அளவு ஷாம்பு தான் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
7. தலைக்கு வெந்நீரை பயன்படுத்தினால் முடி மற்றும் உச்சம் தலை வறண்டு விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D