- Home
- Gallery
- உங்களுக்கு நைட்ல தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ முதல்ல 'இத' கட்டாயம் படிங்க..
உங்களுக்கு நைட்ல தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ முதல்ல 'இத' கட்டாயம் படிங்க..
Night Time Hair Wash : இரவில் தலைக்கு குளிப்பதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பெரும்பாலான பெண்கள் காலையில் தலைக்கு குளிப்பதை விரும்புகிறார்கள். சிலரோ இரவில் குளிப்பது வசதியாக உணர்கிறார்கள். ஆனால் இப்படி இரவில் குளிப்பது முற்றிலும் தவறு.
இரவில் தலைக்கு குளிப்பது முடியை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது தெரியுமா..? ஆம் அதுதான் உண்மை. எனவே, இரவில் தலைக்கு குளிப்பதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இரவில் தலைக்கு குளிப்பதால், தலைமுடி சரியாக காயாமல், முடியின் பளபளப்பை பாதிக்கும். இது தவிர, முடியின் வறட்சியும் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் சூடான நீரில் தலைக்கு குளிக்கிறீங்களா? உங்கள் முடிக்கு நீங்கள்தான் எதிரி! கவனமாக இருங்கள்...
அதுபோல தலைக்கு குளித்த பிறகு முடியை சரியாக சீவுவதில்லை. இதனால் முடி சிக்கலாகி, முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும். இது தவிர, இரவில் அடிக்கடி தலைக்கு குளிப்பதினால் முடியின் வேர்கள் பலவீனமாகிவிடும். காரணம், முடியில் உள்ள ஈரப்பதம் சரியாக வெளியேறாமல் இருப்பதுதான்.
இதையும் படிங்க: தலைக்கு ஷாம்பு போடுவதற்கு முன் கண்டிப்பா 'இத' செய்யுங்க...கூந்தல் பாதிக்காது!
இரவில் தலைக்கு குளித்த பிறகு தலையை சரியாக காய வைக்காமல் அப்படியே தூங்கினால் தலையில் பூஞ்சை தொற்று ஏற்படும். இதன் காரணமாக பொடுகு பிரச்சனை அதிகரிக்கும். எனவே தலைமுடியை நன்கு உலர்த்திய பிறகு தூங்க செல்லுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D