Asianet News TamilAsianet News Tamil

Parenting Tips : குழந்தைகள் தூங்க தனி அறை அவசியமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க..!!

குழந்தைகளுக்கு தனி அறை கொடுப்பதற்கு முன், சரியான வயது மற்றும் முறை என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த  செய்தியை படியுங்கள்..

is it better for children to sleep in separate rooms in tamil mks
Author
First Published Oct 10, 2023, 12:33 PM IST | Last Updated Oct 10, 2023, 12:39 PM IST

உங்கள் குழந்தையை தனி அறையில் படுக்க வைக்க விரும்பினால் கண்டிப்பாக இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், குழந்தைகளை தனித்தனியாக தூங்க வைப்பதற்கான சிறப்பு காரணங்களையும் வயதையும் நிபுணர்கள் கூறியுள்ளனர் இது நீங்கள் உங்கள் மனதில் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயமாகும். எனவே குழந்தைகள் தனித்தனியாக தூங்குவதற்கு சரியான வயது என்ன என்பதை நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளை ஏன் தனியாக தூங்க வைக்க வேண்டும்?
குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக வலுப்படுத்த, அவர்கள் தனித்தனியாக தூங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, குழந்தைகளின் மனதில் இருந்து பயம் நீங்கும் வகையில் இந்த வழியை பயன்படுத்தலாம். ஏனெனில், குழந்தைகள் ஆரம்பத்தில் இருந்தே பெற்றோருடன் தூங்குவது பழகியதால் தனி அறையில் தூங்குவதில் சிரமப்படுகின்றன. எனவே அவர்களுக்குள் இருக்கும் பயத்தை நீக்கவும், அவர்கள் தனியாக வாழ கற்றுக் கொள்ளவும் தனி அறை அவர்களுக்கு மிகவும் அவசியம்.

இதையும் படிங்க:   உங்கள் குழந்தையை காலையில் எழுப்ப இனி கத்த வேண்டாம்... இந்த டிப்ஸ்  ட்ரை பண்ணுங்க..!!

குழந்தைகளை தனித்தனியாக தூங்க வைக்க சரியான வயது என்ன?
குழந்தைகளை தனித்தனியாக தூங்க வைக்க வேண்டிய வயதைப் பற்றி பேசுகையில், குழந்தைகளை ஒரு வருடம் வரை அவர்களுடன் தூங்க வைக்க வேண்டும். அதன் பிறகு படிப்படியாக அதை மாற்றி உங்கள் படுக்கைக்கு பக்கத்தில் ஒரு கட்டில் போட்டு தூங்க கற்றுக்கொடுங்கள். இதற்குப் பிறகு, அவருக்கு 5 முதல் 6 வயது ஆனதும், தனி அறையில் தூங்குவதைப் பழக்கப்படுத்துங்கள்.

இதையும் படிங்க:  Parenting Tips : உங்கள் குழந்தை கவலையாக இருந்தால் அசால்டாக இருக்காதீங்க..இப்படி சந்தோஷப்படுத்துங்க..!!

இப்படி செய்யுங்கள்: 

ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் சொந்த சிறப்பு உள்ளது. அவர்களுக்கு அன்பும் பாதுகாப்பும் தேவை. திடீரென்று ஒரு நாள் தனித்தனியாக தூங்க வைக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்கவே கூடாது. நீங்கள் இதைச் செய்ய வேண்டியிருக்கும் போது,   முதலில் உங்களுடன் குழந்தையுடன் தூங்குங்கள். பிறகு அவர்களை உங்கள் பக்கத்து படுக்கையில் படுக்க வைத்து, பின்னர் படிப்படியாக அவர்களுக்கு ஒரு தனி அறை கொடுங்கள். பல குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள், இப்போது அவர்கள் தனித்தனியாக தூங்க வேண்டும் என்பதை அவர்களே புரிந்துகொள்கிறார்கள். எனவே, குழந்தையை வேறு அறைக்கு மாற்றும் போதெல்லாம் இதை மனதில் கொள்ளுங்கள். மேலும் உங்கள் குழந்தையின் விருப்பப்படி அவர்கள் தூங்கும் அறையை வையுங்கள். அறையை அப்படியே வைத்திருங்கள். இதன் மூலம், அவர் அதிக நேரம் அங்கேயே செலவிடுவார், பின்னர் அவர் அங்கேயே தூங்குவதையும் பழகி விடுவார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios