Green Tea: உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் தங்கள் டயட் லிஸ்டில் தவறாமல் சேர்ப்பது கீரின் டீ. ஆனால், கீரின் டீ குடித்தால் நிச்சயம் உடல் எடை குறையும் என்பது இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ ஆகத் தான் இருக்கும். இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத் தான் அன்றாடம் பருகி வருகின்றனர்.
கிரீன் டீ குடித்தால் ஏற்படும் நன்மைகள்:

கிரீன் டீ குடித்தால், உடலுக்கு நல்லது என்பது உண்மைதான். கிரீன் டீ குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும். மூளை ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை தருகிறது.
அதேபோன்று, உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் தங்கள் டயட் லிஸ்டில் தவறாமல் சேர்ப்பது கீரின் டீ. ஆனால், கீரின் டீ குடித்தால் நிச்சயம் உடல் எடை குறையும் என்பது இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா..?
கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றால் மட்டுமே, உடல் எடையை நிச்சயம் குறைக்க முடியும். கீரின்-டீயை குடிப்பதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை தவிர உடல் எடையை குறைக்கும் நேரடியான காரணிகள் எதுவும், இல்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
