Asianet News TamilAsianet News Tamil

International Yoga Day 2023: யோகா தின வரலாறும் அதன் முக்கியத்துவமும்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இது யோகாவின் முக்கியத்துவத்தையும் நம் மனதிலும் உடலிலும் அதன் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.

international yoga day 2023 date history and significance
Author
First Published Jun 14, 2023, 2:16 PM IST

சர்வதேச யோகா தினம், யோகாவின் இந்தியப் பயிற்சியைக் கொண்டாடுவதற்கும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு நாள். இந்த நாள் 2014 முதல் கொண்டாடப்படுகிறது மற்றும் ஐ.நா பொதுச் சபையால் சர்வதேச அங்கீகார தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவம்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் யோகா பயிற்சியை அங்கீகரிக்கவும், மதிக்கவும் ஒரு சர்வதேச தினம் குறித்த யோசனை முதலில் 27 செப்டம்பர் 2014 அன்று ஐ.நா பொதுச் சபையில் உருவாக்கப்பட்டது.  இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தின் கோடைகால சங்கிராந்தியில் வருவதால் அவர்தான்  இந்த தேதியை முன்மொழிந்தார். இந்த நாள் கோடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும். இதனை அடுத்து 11 டிசம்பர் 2014 அன்று ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. இந்த முன்மொழிவுக்கு 175 உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இதையும் படிங்க: Father's Day 2023: தன்னலமற்ற அன்பின் அடையாளம்! தந்தையர் தினம் ஏன் கண்டிப்பா கொண்டாட வேண்டும் தெரியுமா? 

யோகா தினம் யோகாவின் முக்கியத்துவத்தையும், அது நம் மனதிலும் ஆன்மாவிலும் உள்ள நன்மைகளையும் எடுத்துக்காட்டுகிறது. அடிக்கடி பயிற்சி செய்தால், யோகா உங்கள் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், உங்கள் உடல் நிலையை மேம்படுத்தவும் உதவும். யோகா மற்றும் தியானத்தில் பங்கேற்பது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
யோகாவில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது மனதுக்கும் உடலுக்கும் நன்மையைத் தருவது மட்டுமின்றி ஒருவர் மீது ஒருவர் அன்பையும் இரக்கத்தையும் வளர்க்கிறது. 

"மனிதநேயம்" என்பது 2023 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் ஆகும். சர்வதேச யோகா தினத்தை ஒட்டிய கொண்டாட்டங்கள் யோகாவின் முழுமையான தன்மை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும் மேம்படுத்துவதற்கும் வந்தது. எனவே சிறந்த ஆரோக்கியத்திற்காக உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

யோகா நன்மைகள்:

யோகா இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மற்றும் தசைகளை சூடேற்றும். அதே வேளையில் நாள்பட்ட முதுகுவலியை தீர்க்க யோகா சிறந்த மருந்த்காகும். நாம் தினமும் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கலாம் மற்றும் ஆரோக்கியமான இதயத்தை பெறலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் இதனை விரும்பி கொண்டாடுகின்றனர். எனவே  நீங்களும் இதனுடன் இணைந்து, யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற மற்றவர்களையும் ஊக்குவியுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios