தாய்மொழி என்றால் என்ன..? இதுவரை யாரும் சிந்திக்காததை சிந்திக்க வைக்கும் தமிழ் மொழி..! 

உலக தாய்மொழி தினமாக இன்று நம் தமிழ் மொழியை போற்றி வணங்குவது நம்முடைய தலையாய கடமையாக பார்க்கலாம்.

தமிழ் மொழி என்றாலே கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே தோன்றிய மூத்த மொழி என்பது நாம் அறிந்ததே. அவ்வளவு ஏன்? பாரதியார் கூட யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் வேறு எந்த மொழியையும் பார்த்ததில்லை என குறிப்பிட்டு உள்ளார். பொதுவாகவே தமிழ் மொழிதான் மற்ற மொழிகளில் உள்ள எழுத்துக்களை விட
தமிழ் மொழியில் தான் அதிக எழுத்துக்கள் உண்டு. அந்த வகையில் 247 உயிர்மெய் எழுத்துக்களை கொண்டு நம்மை உயிரோட்டமாக வைத்துள்ளது நம் தமிழ் மொழி.

நாம் எதை நினைக்கிறோமோ நாம் எதை செயல்படுத்த விரும்புகிறோமோ நம் சிந்தனை எல்லாம் செயல்திறன் ஆக மாற்ற பேருதவியாக இருப்பது நம் தாய்மொழியாம் தமிழ்மொழி.

 உணர்தல் என்பது எந்த மொழியில் நாம் உணர்கிறோமோ... அது தான் நம் தாய்மொழி இத்தகைய கோடான கோடி சிறப்பு பண்புகளைக் கொண்ட நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை இந்த உலக தாய்மொழி தினத்தன்று போற்றி புகழ் பாடலாம்

பாரதியார் கூட"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என சொல்லி இருக்கிறார் என்றால் பாருங்களேன் நம் தமிழ் மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது  என்பது புரியும்  

யாராக இருந்தாலும், எத்தனை மொழிகளில் நாம் பேசினாலும் கடைசியில் நாம் எந்த மொழியில்  சிந்திக்கிறோமோ அந்த மொழி தான் அவரவர் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.