Asianet News TamilAsianet News Tamil

கோடை விடுமுறையில் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன..? நச்சுன்னு 9 பாயிண்ட்..! அடுத்த லெவலுக்கு சென்ற பள்ளி கல்வித்துறை..!

கோடை விடுமுறையில் மாணவர்கள் விடுமுறையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 9 முக்கிய குறிப்புகள் அடங்கிய சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கு அனுப்பிமாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

instructions to students for summer vacation
Author
Chennai, First Published Apr 10, 2019, 5:02 PM IST

கோடை விடுமுறையில் மாணவர்கள் விடுமுறையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 9 முக்கிய குறிப்புகள் அடங்கிய சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கு அனுப்பிமாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கோடை விடுமுறையில் மாணவர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களில் தினசரி நாளிதழ்களை வாசித்து அவற்றிலிருந்து தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு அறிவியல் கலை ஆகிய செய்திகள் சார்ந்து செய்தி குறிப்பெடுத்து அடுத்த கல்வி ஆண்டில் முதல் நாளில் ஆசிரியர்களிடம் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

அரசு பொது நூலகத்தில் அனைத்து மாணவர்களும் உறுப்பினராக சேர்ந்துள்ள நிலையில் அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் அருகில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு சென்று புத்தகங்களை படித்து அதில் இருந்து குறிப்பெடுத்து பள்ளி திறக்கும் நாளில் ஆசிரியர்களிடம் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும்.

instructions to students for summer vacation

கோடையில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெற்றோர் பாதுகாவலர் துணையின்றி வெளியில் எங்கும் செல்லக்கூடாது. 

நீர்நிலை உள்ளிட்ட எந்த இடத்திற்கும் பெற்றோர் பாதுகாவலர் துணையின்றி செல்லக்கூடாது என அறிவுரை வழங்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது என்பதால் மாணவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

instructions to students for summer vacation

செல்போனில் அதிகநேரம் மாணவர்கள் செலவிடுவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக கோடைவிடுமுறையை பயன்படுத்த வேண்டும். காலை மாலை நேரங்களில் விளையாட்டில் ஈடுபட வேண்டும். வெயில் நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது.

அனைத்து பள்ளிகளில் தற்போது கணினி வசதி இருப்பதால் அவற்றை பயன்படுத்த ஏதுவாக கோடைவிடுமுறையில் மாணவர்கள் தட்டச்சு கணினி வகுப்புகளுக்கு சென்று அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

instructions to students for summer vacation

மாணவர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள அவர்கள் விரும்பும் உதாரணமாக யோகா இசை பரதநாட்டியம் ஓவியம் தையல் கை சிலம்பம் கபடி நீச்சல் என ஏதாவது ஒன்றையாவது பெற்றோர் பாதுகாப்புடன் கற்றுக் கொள்ளலாம் என அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் வீட்டில் நூலகம் தொடங்கி அவற்றில் இவருடன் பயணித்த பாடநூல்களை வைக்க வேண்டும் மேலும் கடந்த வருடங்களில் படித்த பாடநூல்களையும் வைக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மாணவர்கள் நலன் சார்ந்த இந்த விஷயங்களை கடைபிடித்தால், மிகவும் நல்லதாக அமையும். 

Follow Us:
Download App:
  • android
  • ios