Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களை 1330 திருக்குறளை எழுத சொன்ன இன்ஸ்பெக்டர் இவர்தான்..! படிகாம வகுப்பை கட் அடிச்சிட்டு ஓவரா சீன் போட்டா இப்படிதான் ..!

பத்தாம் வகுப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கட் அடித்துவிட்டு பாளையங்கோட்டை வாஉசி ஸ்டேடியத்தில் அமர்ந்து, அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு வரும் மாணவிகளை பார்ப்பதும் அவர்களுடன் பேச முற்படுவதும் என பல வேலைகளில் குறும்பு செய்துள்ளனர்.

inspector thillai nagarajan punished the students to wrote 1330 thirukural in nellai
Author
Chennai, First Published Nov 11, 2019, 6:12 PM IST

மாணவர்களை 1330 திருக்குறளை எழுத சொன்ன இன்ஸ்பெக்டர் இவர்தான்..! படிகாம வகுப்பை கட் அடிச்சிட்டு ஓவரா சீன் போட்டா இப்படிதான் ..! 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இரு வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சண்டையிட்டு உள்ளதால் அவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கிய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனாவுக்கு இன்றும் பொதுமக்கள் மத்தியில் வாழ்த்து மழை குவிகிறது 

பத்தாம் வகுப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கட் அடித்துவிட்டு பாளையங்கோட்டை வாஉசி ஸ்டேடியத்தில் அமர்ந்து, அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு வரும் மாணவிகளை பார்ப்பதும் அவர்களுடன் பேச முற்படுவதும் என பல வேலைகளில் குறும்பு செய்துள்ளனர்.

inspector thillai nagarajan punished the students to wrote 1330 thirukural in nellai

இது தவிர்த்து சமூக ரீதியான பேச்சும் அதனால் சில பிரச்சினைகளும் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உதவி பெறும் இவ்விரண்டு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாணவர்கள் அனைவரையும் அழைத்து சென்று காவல்துறைக்கும் முன் அமர வைத்து திருவள்ளுவர் எழுதிய 1330 குறளையும் எழுதி விட்டு வீட்டிற்கு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து காவல்துறையினர் வழங்கிய தண்டனை குறித்தும் எதற்காக இந்த தண்டனை என்றும் விவரித்துள்ளனர். மாணவர்களுக்கு காவல் துறையினர் வழங்கிய இந்த தண்டனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. 

இதில் குறிப்பாக, 45 மாணவர்களுக்கும் பாரபட்சம்  இல்லாமல், அனைவரும் 1330 திருக்குறளை  எழுதிவிட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற விதித்தியாசமான தண்டனையை அறிவித்தது பாளையங்கோட்டை காவல ஆய்வாளர் தில்லை நாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios