குழந்தையின்மைக்கு  ஆண்மைக் குறைபாடுகளே முக்கிய காரணங்களாக இருக்கிறது என்றும் ஒரு காலத்தில், பெண்கள் கருத்தரிக்காததற்கு அவர்களின்  மலட்டுத் தன்மையே காரணம் என நம்பப்பட்டுவந்த நிலையில், தற்போது ஆண்மைக் குறைவுதான் அதிக காரணமாக உள்ளது  என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தையின்மை பிரச்சனை இந்தியாவில் அண்மைக் காலமாக கவலைக்குரிய பிரச்சனையாக மாறிவருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் அச்சுறுத்தும் வேகத்தில் இப்பிரச்சனை வளர்ந்துவருகிறது.

குழந்தை பேறுக்கு முயற்சிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 25கோடி பேரில் 1கோடியே 30 லட்சம் முதல் 1 கோடியே 90 லட்சம் தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாத  அதாவது கருத்தரிக்க இயலாத பிரச்சனையை எதிர்கொண்டிருப்பது  தனியார் மருத்துவமனை உன்ற நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக குழந்தையின்மைக்கான பிரச்சனைகளில்  ஏறக்குறைய பாதி ஆண்களின் பிரச்சனைகளே காரணமாக இருக்கிறது. கடந்த காலங்களில் 60  சதவீதம் கருத்தரிக்காததற்கு பெண்களின் மலட்டுத்தன்மையே காரணம் என்றும் 25  சதவீதம்  ஆண்களின் மலட்டுத் தன்மையே காரணம் என்றும் மதிப்பிடப் பட்டது.

ஆனால் தற்போது  ஆண் மலட்டுத்தன்மையே  குழந்தையின்மைக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.18 முதல் 25 வயது பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு 5 ஆரோக்கியமான ஆண்களில் ஒருவர் இயல்புக்கு மாறான விந்து எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.

ஒவ்வொரு 100 தம்பதிகளில் 50 சதவீத  பெண்கள் மலட்டுத்தன்மையுடன் இருப்பதை ஒப்பிடுகையில் 40சதவீத  ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மீதமுள்ள  5 விழுக்காடு நபர்களில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்குமான காரணங்கள் பொதுவானவை. பெண்களுக்கு 32 வயதிலிருந்தே கருத்தரிப்பதற்குரிய திறன் படிப்படியாக, ஆனால், குறிப்பிடத் தக்க வகையில் குறைகிறது என்பதும் மற்றும் 37 வயதிற்குப் பிறகு அது மிக விரைவாக குறைந்துவிடுகிறது என்பதும்  இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.