Fire Dosa : இந்தூர்ல ஒரு கடைக்காரர் தீ பறக்க தோசை சுடுற வீடியோ இன்ஸ்டாகிராம்ல செம வைரலா போயிட்டு இருக்கு. 'Foodie Incarnate' சேனல் ஷேர் பண்ண வீடியோவை பாருங்க.

தோசைன்னா யாருக்குத்தான் பிடிக்காது? ஆனா, நம்ம ஊரு மசாலா தோசை, பொடி தோசை மாதிரி இல்லாம இப்போ புதுசு புதுசா நிறைய வெரைட்டி வந்துட்டு இருக்கு. Schezwan தோசை, ஸ்பிரிங் ரோல் தோசை, சில்லி சீஸ் தோசைன்னு எக்கச்சக்கமான தோசை வகைகள் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா உருவாயிட்டு இருக்கு. இப்போ இந்த லிஸ்ட்ல புதுசா சேர்ந்திருக்கு 'ஃபயர் தோசை'.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வைரல் தோசை

இந்தூர்ல ஒரு ரெஸ்டாரன்ட் இந்த வித்தியாசமான ஃபயர் தோசையை அறிமுகப்படுத்தி இன்டர்நெட்டையே அதிர விட்டுருக்காங்க. அப்படி என்ன ஸ்பெஷல்னு யோசிக்கிறீங்களா? இந்த வீடியோவை நீங்களே பாருங்க:

View post on Instagram

'Foodie Incarnate' என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளது. இது போஸ்ட் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான வியூஸ்களைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்த ஃபயர் தோசையின் விலை வெறும் 180 ரூபாய் தான்.

இதன் ஸ்பெஷாலிட்டியே இதைத் தயாரிக்கும் முறைதான். சூடான கல்லில் மாவை ஊற்றி, அதன் மேல் விதவிதமான மசாலாக்கள், காய்கறிகள், சீஸ், சாஸ் என எல்லாவற்றையும் பரப்புகிறார்கள். கடைசியாக, மேலே மீண்டும் சீஸ் தூவி, ரோல் செய்து பரிமாறுகிறார்கள். சுற்றிலும் தீப்பந்தம் போல நெருப்பு எரிவதுதான் இதன் ஹைலைட். இந்த நெருப்பு எஃபெக்ட்டுக்காக ஒரு டேபிள் ஃபேனைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த புதுவிதமான தோசையை சாப்பிட உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களிடம் சொல்லுங்கள்.