கணவரை அடிப்பதில் 3 ஆவது இடத்தை பிடித்த இந்திய பெண்கள்..

அனைவரும் சமம்

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், அனைவரும் சமமாகத்தான் பார்க்கவேண்டும் என்ற மனப்பான்மை அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆணும் பெண்ணும் சமம் என கூறப்பட்டாலும் பெண்கள் இன்னமும் பல சவாலை ஆண்கள் மத்தியில் சந்தித்துதான் வருகிறார்கள் .

இதற்கு மாற்றாக, பல முரண் பட்ட கால நேரங்களிலும் , ஆண்களை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள், ஆண்களை அடிக்கவும் செய்கிறார்கள். ஆனாலும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பல மொழிக்கு ஏற்ப வாழ்ந்து வரும் பெண்கள் எப்பொழுதும் நம் நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் .

3 ஆவது இடம் :

ஆனால், சில சமயத்தில், ஆண்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் , குறிப்பாக திருமண வாழ்கையில் , கணவரை எதிர்த்து வாழ கூடிய சந்தர்பத்தையும் பெண்கள் சந்திக்கின்றனர் . அவ்வாறு வீட்டில் நிகழும் சில பல காரணங்களால் குடும்பத்தில் நடக்கும் சண்டையில், ஆண்களை தாக்குகின்றனர் ( அடி / உதை ) . அந்த வரிசையில், கணவரை அடிப்பதில் , உலகளவில் இந்திய பெண்கள் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது