ஜவுளி கடை போல் வீட்டில் விதவிதமான புடவைகள் வைத்திருக்கும் பாடகி உஷா உதுப்.. எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆவிங்க..
பாடகி உஷா உதுப் புடவைகள் மீதான தனது ‘ஆவேசம்’ பற்றி மனம் திறந்து கூறி இருப்பதை இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொருவரும் தனித்தனியான பழக்கங்களைக் கொண்டுள்ளனர், அது அவர்களை வேறுபடுத்துகிறது. சிலர் நாணயங்கள், விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை சேகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள், மற்றவர்கள் பல்வேறு ஆர்வங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் புகழ் பெற்ற பின்னணிப் பாடகி உஷா உதுப்,
புடவைகளில் ஈர்ப்பு உள்ளது.
புடவை மீது ஈர்ப்பு:
பாடகி உஷா உதுப்புக்கு இசை மீது எவ்வளவு ஈர்ப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு புடவையின் மீதும் ஈர்ப்பு இருக்கு. அதுவும் இவருக்கு பட்டுப்புடவையின் மீதுதான் அதிக ஈர்ப்பு உள்ளது. பலர் விலை மதிப்பில்லா பொருட்களை சேகரிப்பதில் மகிழ்ச்சி அடைவார் அந்த வகையில் நான் பட்டுப் புடவையில் சேகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் பாடகி உஷா உதுப்.
600 புடவை:
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பாடகி உஷா உதுப். தன்னால் புடவைகள் வாங்கவே முடியாது என்று ஆதங்கத்தில் இருந்த இவர் புடவை மீது கொண்ட ஈர்ப்பால் தற்போது 600 க்கும் அதிகமான புடவைகள் வைத்திருக்கிறார். அந்த புடவைகள், ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மற்றும் மறக்க முடியாத கதையை இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 50 வருட பழமையான புடவைகளையும் இன்னும் அவரிடம் உள்ளதாம். மேலும் 1969இல் தனது முதல் சம்பளத்தில் சென்னையில் வாங்கிய பட்டுப்புடவியையும் இன்று வரை அவர் வைத்திருக்கிறாராம். அதுபோலவே இவர் பத்மஸ்ரீ விருதை பெறும் போது அணிந்திருந்த ஊதா நிற புடவை மற்றும் இவரது அம்மா இவருக்கு பரிசளித்த காஞ்சிவரம் ஆரஞ்சு நிற புடவை இவரது அம்மாவின் அடையாளத்தின் அங்கம் என்று அவர் கூறினார்.
புடவையில் உதுப்புக்கு பிடித்த நிறம்:
நிறங்களைப் பொறுத்தவரை, புடவைகளில் உதுப்பின் விருப்பமானது கருப்பு தானாம். கருப்பு நிற புடவை அணியும் போதெல்லாம், அவரது மாமியார் அவர் மீது கோபம்படுவார் என்றும் அவர் கூறினார்.