indian oil started to give diesel home delivery in pune

அமலுக்கு வந்தது... வீடு தேடி வரும் டீசல்வாகனம்... இனி பெட்ரோல் பங்க் போக வேண்டாம்...!

இந்தியன் ஆயில் நிறுவனமானது முதற்கட்டமாக வீட்டிற்கு வந்து வாகனங்களுக்கு டீசல் நிரப்பி விட்டு செல்லும் புது முறையை அமல்படுத்தி உள்ளது

இந்த சோதனை முறை,முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநில பூனேயில் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆரம்ப கட்டத்தில் புனேவில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த சேவைக்கு எந்த அளவிற்கு மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் என்பதை பார்த்து பின்,இந்த திட்டத்தை மற்ற மாநிலம் மற்றும் மற்ற பகுதிகளுக்கு விரிவு படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

பயன்கள்

இந்த திட்டடத்தின் மூலம் பல பயன்கள் அடையும் சூழல் நிலவுகிறது

1. பேருந்து,ட்ரக் மற்ற பிற டீசலில் இயங்கக் கூடிய வாகனத்திற்கு, இருக்கும் இடத்திலேயே வந்து டீசல் போடப்படுவதால்,வாகன உரிமையாளர்களின் நேரம்,பணம் சேமிக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும்,பெட்ரோல் பங்கில் பெரிய வாகனத்தை கொண்டு டீசல் நிரப்பப்படும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டும் மேலும், மற்ற சிறு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பெட்ரோல் பங்க் உள்ளே செல்ல வழி இல்லாமல் தவிக்கும் சிரமத்தை குறைக்க முடியும்

மேலும் இந்த சேவை டீசலுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.