இந்தியாவில்..! "போஞ்சா" கிராமத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்..! ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல கோடிகளை வாரி வழங்கியது அரசு..!  

இந்தியாவில் ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றால் நம்ப முடிகிறதா ? ஆம்.. இதன் உண்மை பின்னணி என்ன என்பதை பார்க்கலாமா..? 

இந்திய எல்லைப் பகுதியில் ராணுவம் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக தற்போது இந்தியாவிற்கு பாகிஸ்தானை விட சீனா தான் தொல்லையாக மாறி உள்ளது. இதனால், அருணாச்சல பிரதேச எல்லையில் தான் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. போஞ்சா அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள எல்லையோர போஞ்சா என்ற கிராமத்தில் இருக்கும் எல்லோரும் இப்போது கோடீஸ்வரர்கள் இதற்குப்பின் அழகான வரலாறு ஒன்று இருக்கிறது.

காரணம் பஞ்சாப் பகுதியில் இந்திய ராணுவம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராணுவம் உருவாக்க நிலம் வாங்கியது. இதற்காகவே மொத்தம் 200 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்க இந்த நிலம் வாங்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். ஐந்து வருடம் கழித்து தற்போது இருக்கும் விலை என்னவோ அந்த தொகையை நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகப் பெரிய விழா நடத்தப்பட்டு அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா அனைவருக்கும் நிலத்திற்கான பணத்தை கொடுத்த்தார். அதில் 30 குடும்பங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40.8 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகமாக ஒரு குடும்பம் 6.3 கோடி ரூபாய் பெற்றுள்ளது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குடும்பம் 2.45 கோடி ரூபாயும், இன்னும் 29 குடும்பங்கள் 1.09 கோடி ரூபாயும் பெற்றுள்ளன.

இதனால் தற்போது அந்த கிராமம் தான் இந்தியாவின் பணக்கார கிராமம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதேபோல் அந்த கிராமத்தில் மட்டுமே தற்போது அதிக கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். இந்த கிராமத்தில்  வசிக்கும் மக்கள் அனைவரும் கோடீஸ்வரர் என்பதால், தற்போது  புள்ளிவிவரம் எடுக்கப்பட்டு ஆசியாவிலேயே பணக்கார கிராமம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.