இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா..! கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..!
பாகிஸ்தானில் இதுபோன்ற வெட்டுக்கிளிகள் ஏற்கனவே கூட்டம் கூட்டமாக வயல்களை நாசப்படுத்தி உள்ளது என்பது குறிபிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் கஷ்டம் ஏற்படும்.
இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா..! கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..!
உலகமே கொரோனாவால் பெரும் பாதிப்பு அடைந்து உள்ள நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி தரும் விஷயமாக ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் பொருட்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் படி, ஆப்பிரிக்காவிலிருந்து கூட்டமாக கிளம்பும் வெட்டுக்கிளிகள் ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக கடந்து இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்தால் விவசாய பயிர்களை அழித்து பெரும் நாசத்தை விளைவிப்பதுடன் எதிர்பாராத அளவுக்கு பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது
கொரோனா பாதிப்பால் தற்போது உலகமே அமைதியாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.எந்த ஒரு சேவையும் தற்போது இல்லை. அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளது. மனித குலத்திற்கு மிகவும் சவாலாக உள்ள கொரோனாவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே பெரும் நோக்கமாக இருக்கிறது.
பொருளாதார இழப்பு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அவரவர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு முடிந்து விவசாயத்திற்கு திரும்பலாம் என விவசாயிகள் பலர் காத்திருக்கும் நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலாக ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் பொருட்கள் அமைப்பு வெட்டுக்கிளிகள் குறித்து தெரிவித்து உள்ளது
பாகிஸ்தானில் இதுபோன்ற வெட்டுக்கிளிகள் ஏற்கனவே கூட்டம் கூட்டமாக வயல்களை நாசப்படுத்தி உள்ளது என்பது குறிபிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் கஷ்டம் ஏற்படும். விவசாய நிலங்கள் பாதித்து, விவசாய பொருட்களும்பயிரிட முடியாது. தற்போது கொரோனா தாக்கமே பெரும் பிரச்சனையாக இருக்கும் போது அதற்குள் வேறு ஒரு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.