Independence Day 2024 : தேசியக்கொடி ஏற்றும்போது செய்ய கூடியவை.. கூடாதவை இங்கே..!
Independence Day 2024 : இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், தேசிய கொடியை ஏற்றும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த 2024 ஆம் ஆண்டு இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடவுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படும். கொடியின் வடிவமைப்பு வண்ணங்கள் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார அர்த்தங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது இந்தியாவின் தேசிய சின்னமாக மகத்தான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இது நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் அபிலாஷா கலை பிரநிதித்துவப்படுத்துகிறது. இந்நிலையில், சுதந்திர தினம் அன்று
தேசிய கொடியை ஏற்றும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இங்கே பார்க்கலாம்.
இதையும் படிங்க: மூவர்ணக் கொடி + பிரிட்டிஷ் கொடி.. 1947 ஆகஸ்ட் 15 அன்று.. இப்படியொரு செயலை செய்தாரா நேரு? வைரல் கடிதம்!
செய்ய வேண்டியவை:
- தேசிய கொடி எந்த அளவிலும் இருக்கலாம். அதாவது, அது நீளம் மற்றும் உயரம் விகிதம் செவ்வக வடிவத்தில் 3:2 ஆக எடுக்க வேண்டும்.
- கொடியை ஏற்றும்போது காவி கலர் மேலையும் கீழே பச்சை நிறத்துடன் கொடி பறக்க வேண்டும்.
- தேசியக்கொடியை ஏற்றும் போது சின்னத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மரியாதை மற்றும் கண்ணியத்துடன் ஏற்றவும்.
- கொடியை ஏற்றுவதற்கு பொருத்தமான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை விறுவிறுப்பாக மேலே ஏற்றி, மெதுவாக கீழே இருக்க வேண்டும். முக்கியமாக, கொடியை ஏற்றும் போதும் இறக்கும்போதும் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும்.
- கொடியை ஏற்றுபவர்கள் தூய்மையான மற்றும் மரியாதைக்குரிய உடைகளை அணிந்திருக்க வேண்டும்.
- கொடியின் அளவும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருளும் தரமானதாக இருக்க வேண்டும்.
- புதிய விதிகளின்படி, காகித துணி மட்டுமல்லாமல் பாலிஸ்டர் துணிகளிலும் கொடிகளை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, மாலையில் கொடியை இருக்க வேண்டிய கட்டாயமில்லை. இரவில் கூட அதை பறக்க விடலாம்.
- தனியார் அமைப்பு அல்லது கல்வி நிறுவனங்கள் அனைத்து நாட்களிலும் சமர்ப்பங்களிலும் தேசிய கொடியை ஏற்றலாம் அல்லது காட்சிப்படுத்தலாம்.
- தேசிய கொடியை சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை வானிலை பொருட்படுத்தாமல் முடிந்தவரை பறக்க விடுங்கள்.
இதையும் படிங்க: பகத் சிங், துர்கா தேவிக்கு உதவிய சுசீலா திதியின் அறியப்படாத வீர வாழ்க்கை வரலாறு
செய்யக்கூடாதவை:
- சேதமடைந்த தேசிய கொடியை ஏற்ற கூடாது. அது தரையைத் தொடக்கூடாது. அதுபோல தேசிய கொடி எந்த வகையிலும் சேதப்படுத்திக் கூடாது.
- தேசியக்கொடிக்கு பக்கத்தில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியையும் பறக்க விடக்கூடாது. அதுபோல தேசியக்கொடி பறக்கும் கம்பத்தில் வேறு எந்த கொடியை பறக்க விடக்கூடாது.
- தேசியக்கொடி பறக்கும் கம்பத்திற்கு மாலை, பூக்கள் போன்ற எந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.
- தேசியக்கொடியை மாலையாகவோ
- பூங்கொத்தாகவோ அல்லது வேறு எந்த அலங்காரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது.
- தேசிய கொடியை மேசை மீது விரிக்கவோ, கைக்குட்டை போன்ற பொருளாக பயன்படுத்தக் கூடாது.
- பூக்கள் மாலைகள் அல்லது சின்னங்கள் உட்பட்ட வேறு எந்த பொருளையும் தேசிய கொடியின் மேல் வைக்கக் கூடாது.
- அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் தவிர கொடியை அறக்கொம்பத்தில் பறக்க விடக்கூடாது.
- கொடியில் ஏதேனும் ஸ்லோகன் வார்த்தைகள் அல்லது வடிவமைப்புகளை சேர்ப்பதன் மூலம் கொடியை அவமானப்படுத்தக் கூடாது.
- கொடியை இரவில் ஏற்றவும், கட்டவும் கூடாது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D