increase divorce case in courts
இன்றைய கால கட்டத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் மட்டும் அல்ல. திகட்ட திகட்ட காதலிப்பவர்களும் கொஞ்ச நாளில் வெறுப்பு அடைந்து பிரிந்து விட எண்ணி நீதிமன்றங்களை நாடுகின்றனர். காரணம் என்ன என்று ஆராய்ந்து பாத்தால் உண்மை நிலவரம் புரிய வருகிறது.
காதலிக்கும் போது பெண்கள் ஆண்கள் திறமைசாலிகளா? அன்பானவர்களா? சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவார்களா என்பது மட்டுமல்ல ஏற்கனவே திருமணம் ஆனவர்களா என்பதையும் கவனிக்க தவறிவிடுகிறார்கள். இதனால் திருமணத்திற்கு பிறகு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல ஆண் சந்தேகப்படுபவராக இருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையே சீரழிந்து விடுகிறது. ஆண் கவனிக்க வேண்டிய விஷயம் தேர்ந்தேடுத்த பெண் தனக்கு ஏற்றவளா, அவள் பொறுப்பான பெண்ணா? அன்பானவளா? தன் குடும்பத்தையும் தன் பெற்றோரையும் அன்புடன் அரவணைத்து செல்பவரா என கவனிக்க தவறிவிடுகிறார்கள்.
காதலிக்கும் போது தெரிந்த அனைத்தையும் ஏற்று கொண்ட இவர்கள் திருமணத்திற்கு பின் இவ்விஷயங்கள் அனைத்தும் எதிர்மறையாக தெரிய ஆரம்பிக்கும். எனவே திருமணத்திற்கு பிறகு ஈகோ ஏற்பட்டு அந்த ஈகோவே இருவரின் வாழ்க்கையையும் சின்னாபின்னமாக்குகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நினைக்கின்றனர். இந்த பிரிவு ஏற்பட மிகவும் உதவியாக இருப்பது சமூக வலைத்தளங்கள்.

ஏதோ ஒரு கட்டத்தில் பிரிய நினைக்கும் தம்பதிகள் சமூக வலைதளங்களில் கிடைக்கும் நண்பர்கள் உண்மையாக இருப்பார்கள் என்று நம்பி தன் வாழ்க்கைப் பிரச்சனையை பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆணாக இருந்தால் வேறுறொரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் தவறாக பயன்படித்தப்படுவார். இதனால் பலர் வாழ்க்கை இழந்து தவிக்கின்றனர். இதனால் பிரிந்து விட எண்ணி நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஒரே மாதிரியான பிரச்சனைகளுக்காக பல தம்பதிகள் நீதிமன்றங்களை நாடி விவாகரத்திற்கு காத்திருக்கின்றனர். இதனால் குடும்ப நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாக உள்ளதால் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
