பருவநிலை மாற்ற அபாயங்களுக்கு உள்ளாகும் உலகின் முதல் 50 நாடுகள் பட்டியலில் இந்தியாவில் இருந்து பீகார், உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உட்பட ஒன்பது மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் அழிவு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

"உள்நாட்டு பருவநிலை ஆபத்து" என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை 2050 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள 2,600 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் மாகாணங்களின் நிலம் சார்ந்த பருவநிலை அபாயத்தை மதிப்பிட்டுள்ளது. அதிக கட்டிடங்களை கொண்டு இருக்கும் மாநிலங்கள் அதிக சேதாரத்தை, அழிவை எதிர்கொள்ளும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கான செலவுகளை கணக்கிடும் ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்ட கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் அல்லது XDI தற்போது இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

வெள்ளம், காட்டுத் தீ மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற தீவிர பருவநிலை மாற்றம் காரணமாக கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் மாதிரி கணிப்புகளை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி, 2050 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தில் இருக்கும் முதல் 50 மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள் (ஒன்பது) முதல் 50 இடங்களில் உள்ளன. இதில் பீகார் (22வது இடம்), உத்தரபிரதேசம் (25), அசாம் (28), ராஜஸ்தான் (32), தமிழ்நாடு (36), மகாராஷ்டிரா ( 38, குஜராத் (48), பஞ்சாப் (50) மற்றும் கேரளா (52) ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

பருவநிலை மாற்றத்தால் பூமியில் உள்ள 65% பூச்சிகள் அழிந்து போகும்.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தி கிளைமேட் ரிஸ்க் குரூப்பின் பருவநிலைப் பிரிவின் தலைவரான ஜியர்ஜினா வூட்ஸ் தெரிவித்து இருக்கும் தகவலில், ''இந்த ஆய்வின் முடிவின்படி, பருவநிலை மாற்றத்தில் இருந்து துறைமுகங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்தியாவிலுள்ள பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள் உட்பட உலகளவில் உள்ள முக்கிய பொருளாதார மையங்கள், 2050 ஆம் ஆண்டில் ஏற்படும் சேதத்தில் இருந்து தப்ப முடியாது. இந்தப் பட்டியலில் உலகளவில் 100 இடங்கள் இடம் பெற்றுள்ளன. சேத அபாய பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலங்கள் மற்றும் மாகாணங்களை சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள ஒவ்வொரு மாநிலம், மாகாணம் மற்றும் பிரதேசத்தை ஒப்பிட்டு, அங்குள்ள கட்டமைப்பு சூழல் தொடர்பாக காலநிலை ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் விரிவான கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்புகள், பொதுவாக அதிக அளவிலான பொருளாதார செயல்பாடு மற்றும் மூலதன மதிப்புடன் ஒன்றுடன் ஒன்ராக இணைந்துள்ளது. 

மேலும் அவர் கூறி இருக்கும் தகவலில், ''பருவநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது ஆசியா என்று குறிப்பிட்டு, இழப்பீடும் அதிகமாக இருக்கும் தெரிவித்துள்ளது. மேலும் மோசமான பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதன் மூலமும், பருவநிலை பாதுகாப்பு முதலீட்டை விரைவுபடுத்துவதில் இருந்தும், மிகவும் மோசமான பாதிப்பை தடுக்க முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.