In the place where the wounded apply this

இயற்கையை போல தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் விஷயம் உலகில் ஏதுமில்லை. அந்த வகையில்தான் நாட்டு மாட்டின் கோமியமே அதற்கு மருந்தாகும் விதத்தை சுட்டிக் காட்டுகிறார்கள் வேளாண்மைதுறை வல்லுநர்கள். 
அதாவது மாடுகள் தொழுவத்தில் கட்டிப்போட்டிருக்கும் போதோ அல்லது மேய்ச்சலுக்கு போன இடத்திலோ அவைகளுக்குள் சண்டையிட்டு, ஒன்றின் கொம்போ அல்லது காலோ மற்றொன்றின் மீது குத்தி காயங்கள் ஏற்படலாம். அந்த புண் மாடுகளுக்கு வேதனையை தருவதோடு, சரி செய்யாமல் விட்டால் பெரிய புண்ணாக உருவெடுத்து மேலும் பல சிக்கல்களை உருவாக்கும். 
எனவே புண்கள் ஆழமாக இருந்தால் உடனே சரி செய்ய வேண்டியது அவசியம். அதற்காக காயம்பட்ட மாட்டை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பணம் செலவு செய்து ரசாயன மருந்துகளை வாங்கி பூசித்தான் சரி செய்ய வேண்டும் என்பதில்லை. காயம்பட்ட உங்களின் மாடானது நாட்டு மாடாக இருந்தால் அதன் கோமியத்தை பிடித்து, புண்ணின் மீது ஊற்றியோ அல்லது தேய்த்தோ வர சரியாகிவிடும். 
பிற கால்நடைகளுக்கு ஏற்பட்ட இந்த மாதிரியான புண்ணுக்கும் நாட்டு மாட்டின் கோமியத்தை பயன்படுத்தலாம். காரணம், நாட்டு மாட்டின் கோமியத்தில் அவ்வளவு நோய் தீர்க்கும் கூறுகள் அடங்கியிருக்கின்றன என்கிறார்கள் வல்லுநர்கள்.