அடங்காத கள்ளக்காதல்..!  பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த கள்ளக்காதலி..தாலி கட்டிய மனைவிக்கு நேர்ந்த சோகம்..! 

சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்  உமா மகேஸ்வரி. இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் கட்டாய பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் மீது மேலும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

உமாமகேஸ்வரி- டில்லிபாபு இருவருக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. தற்போது 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்கும் டில்லிபாபு வுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த உமாமகேஸ்வரி தகராறு செய்துள்ளார். வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் பல சமயங்களில் சண்டை சச்சரவு ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரியை அடிக்கவும் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் உமாமகேஸ்வரி.

பின்னர் டில்லிபாபுவை அழைத்து,விசாரணை நடத்தி அவரிடம் எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர். அதாவது மீண்டும் இது போன்று நடக்காமல் மனைவியை துன்புறுத்தாமல் இருப்பேன் என எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் டில்லிபாபு. ஆனால் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீதேவியை தன் வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் டில்லிபாபு. இதை தட்டிக்கேட்ட சொந்த மனைவி உமா மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தி மிகவும் துன்புறுத்தி உள்ளார் டில்லி பாபு. இதுகுறித்து பரங்கிமலை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார் உமாமகேஸ்வரி 

மீண்டும் டில்லிபாபுவை கைது செய்த போலீசார் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். அதன் பின்னரும் சற்றும் அடங்காத கள்ளக்காதல் மோகத்தால் ஸ்ரீதேவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். மீண்டும் உமாமகேஸ்வரி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் டில்லிபாபு. இதற்கிடையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இங்கு செய்வதே இங்கு கள்ளக்காதல்.. ஆனால் கள்ளக்காதலி ஸ்ரீதேவிக்கு என்ன ஒரு தைரியம் என்று பாருங்கள். மனைவி உமா மகேஸ்வரி ஒரு போலீசார் என்பதையும் மீறி அவருக்கு போன் செய்து மிரட்டல் வேறு விடுத்துள்ளார் ஸ்ரீ தேவி 

இது தொடர்பாக பரங்கிமலை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதேவியை  கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தற்போது சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை தான் என்றென்றும் கடைபிடிக்கப்படும் ஓர் முக்கியமான கலாச்சார விஷயம். ஆனால் இன்று இதற்கெல்லாம் ஒரு மதிப்பு கூட கொடுக்காமல் இவ்வளவு தைரியமாக கள்ளக்காதலில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் சட்டப்படி மனைவியான உமா மகேஸ்வரிக்கு போன் செய்து மிரட்டல் விடுக்கும் அளவிற்கு தான் இன்றைய கள்ளக்காதல் மோகம்  அதிகரித்து உள்ளதா என்ற சந்தேகம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது..எங்கே செல்கிறது இந்த உலகம் என....