அத்திவரதர் வைபவத்தின் 20 ஆவது நாளான இன்றும் பக்தர்களின் கூட்டம் காஞ்சிபுரத்தில் அதிகமாக கூடி உள்ளது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ள மிக சிறப்பான நிகழ்வு இது என்பதால், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறதுஇதன் காரணமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக சிறந்த நிகழ்வு என்பதால், அத்தி வரதரை தரிசிக்க  மக்கள்  கூட்டம் அலை மோதுகிறது. மேலும் நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் மரணமடைந்தனர். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதனை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் என்ற முறையை நேற்று அறிமுகப்படுத்தியது அறநிலையத்துறை. இந்த திட்டத்தின் மூலம் தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக ரூபாய் 300 கொடுத்து செலுத்தி முன்பதிவு செய்து கொண்டு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தி வரதரை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என யாரும் அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்  விடுத்து உள்ளார்.