அடுத்த நடவடிக்கை: " ரோட்டுக்கு வந்தால் வீட்டுக்கு வருவோம்" உஷார்!

21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் வெளியில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்.. அது என்னமோ சும்மா சொல்றாங்கா என்பது போல...வெளியில் சென்று வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் 300- கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக கொரோனா பரவும் மாநிலமாக மாறி வருகிறது தமிழகம். 

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில்110 பெருகும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் மேலும் பரவாமல் தடுக்க காவலர்கள் பெரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 


அதன் படி,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நாகெனஹள்ளி பகுதியில் காவலர்கள் சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதற்காக பெயிண்டால், ‛நீங்கள் சாலைக்கு வந்தால், நான் உங்கள் வீட்டிற்கு வருவோம்" என எழுதப்பட்டு உள்ளது. இந்த வாசகம் சமூக வலைதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது