Asianet News TamilAsianet News Tamil

இனி "பீச்சில் செல்பி எடுத்தால்" மரண தண்டனை..!

தாய்லாந்தில் விமான நிலையம் அருகே உள்ள மாய்காவோ என்ற கடற்கரை பகுதியில் செல்பி எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது.

if we take the selfi in thailand beach severe punishment will be done
Author
Chennai, First Published Apr 13, 2019, 6:13 PM IST

இனி "பீச்சில் செல்பி எடுத்தால்" மரண தண்டனை..! 

தாய்லாந்தில் விமான நிலையம் அருகே உள்ள மாய்காவோ என்ற கடற்கரை பகுதியில் செல்பி எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது.

உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் தாய்லாந்திற்கு வருவது உண்டு. அதிலும் குறிப்பாக புக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் உள்ள
மாய்காவோ என்ற கடற்கரை பகுதி சிறப்பு வாய்ந்தது. காரணம் இதற்கு அருகிலேயே விமானம் நிலையம் உள்ளதால் இங்கிருந்து புறப்பட கூடிய விமானங்கள் கடற்கரை ஓரமாக கையைத் தொட்டுச் செல்லும் அளவிற்கு கடற்கரையை ஒட்டி பறக்கும்.

if we take the selfi in thailand beach severe punishment will be done

இவ்வாறு மிகவும் தாழ்வாக பறப்பதால் அந்த இடத்திலிருந்து செல்பி எடுத்துக் கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். விமானம் கிளம்பும் நேரம் பார்த்து அந்த இடத்தில் நின்று பெரும்பாலான மக்கள் செல்பி எடுப்பார்கள். அவ்வாறு எடுக்கும் போது அவர்களுக்கு சில சமயத்தில் காயம் ஏற்படுவது மட்டுமின்றி விமானியின் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

if we take the selfi in thailand beach severe punishment will be done

எனவே விதியை மீறி யாராவது அங்கு நின்று கொண்டு செல்பி எடுத்தால் உச்சகட்டமாக மரண தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்த போதிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தெரியாத சுற்றுலா பயணிகள் ஒரு சிலர் இன்றளவும் அந்த இடத்தில் நின்று கொண்டு செல்பி எடுப்பது வழக்கமாக கொண்டு உள்ளனர்.

if we take the selfi in thailand beach severe punishment will be done

அதேவேளையில் இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தால் தாய்லாந்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை தெரிவித்து உள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios