Asianet News TamilAsianet News Tamil

கால் ஆட்டிக்கொண்டே இருந்தால் துன்பத்திற்கு ஆளாகும் குடும்பம் ..! ஏன் இப்படி தெரியுமா...?

நாம் காலையில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும்போது நல்ல சுறுசுறுப்பாக செல்வோம். மாலை வீடு திரும்பும்போது சோம்பலாக களைப்போடு வருவோம்.

if we shake our leg continously our family will suffer a lot
Author
Chennai, First Published Feb 4, 2019, 5:57 PM IST

கால் ஆட்டிக்கொண்டே இருந்தால் துன்பத்திற்கு ஆளாகும் குடும்பம் ..! ஏன் இப்படி தெரியுமா...? 

நாம் காலையில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும்போது நல்ல சுறுசுறுப்பாக செல்வோம். மாலை வீடு திரும்பும்போது சோம்பலாக களைப்போடு வருவோம். காலையில் இருந்த சுறுசுறுப்பு எங்கே போய்விட்டது ? நாம் வேலை செய்யும்போது நம் உடல் சக்தி செலவாகிறது. அதனால் நாம் சக்தி இழந்து மாலை வரும்போது களைப்படைந்து காண்போம். 

நாம் எந்த வேலை செய்தாலும் நம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும். நடப்பது, ஓடுவது, பார்ப்பது, பேசுவது இதுபோல் எந்த வேலை செய்தாலும் நம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும். இதே போல் தான் எந்த நேரமும் காலாட்டிக் கொண்டே இருப்பதால் உடலில் சேமித்து வைத்துள்ள சக்தி அனைத்தும் செலவாகி விடும். அதனால் நாம் அன்றாட வேலைகள் செய்யும் போது உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது. அதனால் நாம் விரைவில் களைப்படைந்து விடுகிறோம்.

if we shake our leg continously our family will suffer a lot

இது தொடரும் போது சில காலம் கழித்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் விரைவில் நோய்வாய்படும். இதுபோல் தேவை இல்லாமல் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டால் வேலைக்கு செல்ல முடியாது மருத்துவ செலவு அதிகம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன கஷ்டம் பண கஷ்டம் ஏற்படும்.

இந்த விளக்கத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லி விளக்கம் கொடுக்க முடியாது என்பதால், அதை சுருக்கி காலாட்டிக்கொண்டு இருந்தால் குடும்பத்திற்கு கேடு உண்டாகும் என நம் முன்னோர்கள் தெரிவித்து  உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios