If we say this answer for a call we will lose the money from bank

மோசடி என்ற வார்த்தைக்கு பல பொருள் உள்ளது. அதாவது எங்கு மோசடி நடந்தது? எதில் மோசடி நடந்தது ? எப்படி நடந்தது ? யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என பல கேள்விகள் நம் மனதில் எழும். 
அதற்கெல்லாம் ஒரே ஒரு ஒரு பதில் நாம் ஏமார்ந்து நிற்பது தான். ஒரு சிலர் யாருக்காவது பணம் கொடுத்து, அதனை திரும்ப பெறமுடியாமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஒரு சிலர் ஆசை வார்த்தைக்கு மயங்கி, அதிக லாபம் கிடைக்கும் என எண்ணி எதிலாவது முதலீடு செய்து மாட்டிக்கொள்வார்கள்.இது போன்று பல உதாரணங்கள் கூற முடியும் . அதெல்லாம் சரி இப்ப எந்த மோசடி பற்றி பார்க்க போகிறோம் தெரியுமா ?

ஆம், இந்திய குடிமகன் என்பதற்கு ஒரு அடையாளம் ஆதார் கார்டு. மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட ஒன்று . அதே வேளையில் ஆதார் அமலுக்கு வந்தவுடன் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளது என்று தான் கூற முடியும். ஆம் ஆதார் எண்ணை நம் வங்கி கணக்கு, ரேஷன் அட்டை, மொபைல் எண், பான் எண் என அனைத்திலும் இணைத்துள்ளோம்.இது ஒரு நல்ல விஷயம் தான். 
ஆனால் ஒருவருடைய அறியாமையை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி செய்து , வங்கி கணக்கிலிருந்து நம் பணத்தை அபேஸ் செய்ய பல மோசடி கும்பல் தற்போது களத்தில் இறங்கி உள்ளது.

எப்படி ?

ஆதார் எண் இருக்கிறதா என கேட்டு உங்கள் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வரும் ஆம் எனில் நம்பர் 1 ஐ அழுத்தவும் என்பார்கள். அழுத்தியவுடன் உங்கள் ஆதார் எண்ணை பதிவிடுங்கள் என்ற வாய்ஸ் மேசெஜ் வரும்

பிறகு ஒரு OTP உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும். அந்த நம்பரை பதிவிடவும் எனவும் மெசேஜ் கிடைக்கும்.அவ்வாறு பதிவிட்டீர்கள் என்றால், நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணம் அழகாக கொள்ளையடிக்கப்படும். 

அதாவது சொந்த காசுல நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொள்வது என்பது இது தான்.எனவே இதுபோன்ற ஒரு நிலையில், உங்களுக்கு ஏதாவது சந்தேகப்படும்படி நடந்தால் உடனே புரிந்துக் கொண்டு உங்கள் அழைப்பை துண்டித்துக்கொள்வது நல்லது.