அனைத்திற்கும் விடிவுகாலம் பிறக்க இந்த "ஒத்த வார்த்தை" தினமும் சொல்லி வர வேண்டுமாம்..! 

தினம் தினம் எண்ணற்ற தெய்வங்களை வேண்டி வணங்கி வந்தாலும் சில சமயத்தில் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வே இல்லாதது. போன்று தோன்றி மனம் உடைந்து போகும் நிலை உருவாகும் அல்லவா..? 

அதற்கெல்லாம் ஒரு விடிவு காலமாக உருவாகி உள்ளது தான் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள இராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ் வர்ணாகர்ஷண பைரவர் ஆலயம்.

மனிதர்கள் கேட்கும் வரத்தை அருளக்கூடியவர் பைரவர் என்பது மக்களின் நம்பிக்கை. சிவனுடைய மற்றொரு அவதாரம் தான் பைரவர். ஒருவரது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நிகழ காரணம் நவ கிரகங்களின் பார்வை தான், இந்த பார்வை வக்கிரமாகும் பொழுது மனித வாழ்வு பல சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. இந்த இன்னல்களை போக்கி வாழ்வை வளமாக மாற்றக்கூடியவர்தான் பைரவர். 

மனிதர்களுக்கு செல்வ செழிப்பை தருவது அஷ்ட லட்சுமிகள் தான். ஆனால் அந்த அஷ்ட லக்ஷ்மிக்கே யாரிடம் பணம் பெற்று தருகிறார்கள் தெரியுமா..? இந்த பைரவரிடம் தான். பைரவர் என்றால் பயத்தை போக்குபவர் என்பது தான் பொருள். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்கி அருளை வழங்கக்கூடியவர்.

எனவே பைரவரை தொடர்ந்து வணங்கி வந்தாலே போதும், தீவினைகள் அழிந்து, எதிரிகள் தொல்லை குறைந்து விடும். திருமண தடை நீங்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். நமக்கு தேவையான பணம் நம்மை வந்தடையும். சனீஸ்வரரின் தாக்கம் குறைவாக இருக்கும். காரணம் சனீஸ்வரருக்கு குருவே பைரவர் தான். எனவே பைரவரை வண்ணகி வரலாம். இத்தைகைய சிறப்பு வாய்ந்த பைரவரின் கோவில் ஈரோடு அவல்பூந்துறையில் உள்ளது.

இந்த கோவிலின் சிறப்பு அம்சமே, 64 வகை பைரவர்களை ஒரே இடத்தில் அமைய பெறுவதே. இங்கு சென்று, "பைரவ நமஹ ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி வந்தால், அனைத்து பிரச்சனையும் நம்மை விட்டு நீங்கி வாழ்வில் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.