அத்தவரதரை மீண்டும் குளத்தில் வைக்காவிட்டால் இப்படி  ஒரு பிரச்சனை வருமா..? 

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கவில்லை என்றால் என்னவாகும் என சிற்ப கலைஞர் ஒருவர் தன் கருத்தை பதிவு செய்து உள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிகவும் விசேஷமான நிகழ்வு அத்திவரதர் வைபவம். அந்த வகையில் தற்போது காஞ்சிபுரத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை அத்திவரதர் வைபவம் சிறப்பாக நடைபெறும்.தரிசனத்திற்காக தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். குளத்தில் இருந்து வெளியே எடுத்த அத்திவரதரை பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு பின்னர் 48 நாட்களுக்கு பிறகு மீண்டும்  குளத்தில் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அத்தி வரதரை பற்றி மர சிற்ப கலைஞர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ள கருத்து இதுதான்:

பொதுவாக சிலைகளை மரத்தில் செய்ய வேண்டும் என்றால் அது அத்தி மரத்தில் தான் செய்ய வேண்டும் ... அவ்வாறு செய்யும் சிலைகளுக்கு ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகாலம் என சொல்லலாம். ஆனால் அத்திமர சிலை நீர்நிலை மற்றும் வெயில் இவை இரண்டிலும் மாறி மாறி இருந்தால் அதனுடைய ஆயுட்காலம் குறையும். ஆனால் அத்திவரதர் சிலை பற்றி அப்படி கூற முடியாது.

காரணம் சிலையை வடிக்கும் போதே பல்வேறு எண்ணெய்களை கொண்டு அத்தி வரதரை மெருகேற்றி இருக்கின்றனர். அதனால்தான் இன்றளவும் அத்திவரதர் உறுதித் தன்மையுடன் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்திற்காக தற்போது சிலை வெளியே எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை மீண்டும் தண்ணீருக்குள் வைப்பதுதான் நல்லது. இல்லை எனில்...உறுதி தனமைக்கு ஏற்றவாறு பல விதமான எண்ணெய்களை வைத்து தினமும் ஆராதிக்க வேண்டும். இல்லையெனில் சிலைக்கு பாதிப்பு ஏற்படலாம். அதாவது சிலை வலுவிழக்கலாம் என தெரிவித்து உள்ளார்.

மேலும் இந்த அத்திவரதர் பெண் அத்திமரத்தால் செய்யப்பட்டுள்ளது என்றும் சிலையை வடித்த போது சுமார் 500 கிலோ எடையுடன் இருந்திருக்கும் என்றும் பின்னர் கொஞ்சம் எடை குறைந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் மர சிற்ப கலைஞர் லக்ஷ்மணன்.