இரட்டை குழந்தை பிறக்க ஆச்சர்ய கிணற்று நீர்..! குவியும் மக்கள்..! 

குழந்தை பிறப்பு என்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இன்றளவும் நம்மால் எத்தனையோ தம்பதிகள் குழந்தை பேறு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு அதிசய கிணறு பற்றி செய்தி வெளியாகி உள்ளது. 

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரங்கம்பேட்டை மண்டலத்தில் அமைந்துள்ளதுதான் தொட்டி குண்ட. இந்த கிராமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து உள்ளது. இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி மக்களுக்கு தெரியவர ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த கிணற்று நீரை பருக மக்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். 

இந்த கிராமத்தில் 110 பேருக்கு மேல் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதுகுறித்து அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவர் தெரிவிக்கும்போது, "எங்கள் ஊரில் 6 வயது முதல் 60 வயது இரட்டையர்கள் உள்ளனர்.அதற்கெல்லாம் காரணம் இங்குள்ள கிணறு தான். இந்த கிணற்று நீரை பருகினால் இரட்டை குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

அதற்கேற்றவாறு எங்கள் கிராமத்து தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த கிணற்று நீரை பருக படையெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். தற்போது இந்த கிணற்றின் தற்போது இந்த கிணற்று நீரில் ஒளிந்திருக்கும் அதிசயம்தான் என்ன என்பதை சோதனை செய்வதற்காக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.