கனவு காண்பது சுகமானது தான்...அதிலும் நல்ல கனவா..?  கெட்ட கனவா என்பதில்  உள்ளது... அது சுகமான கனவா அல்லது பயமான கனவா என்று ...

ஒரு சிலருக்கு காதல் செய்வது போலவும்,ஒரு சிலருக்கு கோடீஸ்வரர்கள் ஆவது போலவும் கூட கனவு வரும்..

ஒரு சிலருக்கு,கெட்ட கனவு வரும்..பேய் கனவு வரும்..ஒரு முறை பேய் கனவு  வந்துவிட்டால் மனதில் ஏதோ ஒருவிதமான் பயத்தை கொடுக்கும்..அதன் பிறகு இரவு  நேரத்தில் வெளியில் செல்ல கூட பயம்  வரும்....

மேலும் ஒரு சிலருக்கு வேறு விதமான கெட்ட கனவுகள் வரும்...

இது போன்று பல நாட்களாகவோ அல்லது பல மாதங்கலாகவோ..சில ஆண்டுகளாக  கூட  அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு..ஒரு விடிவை கொடுக்கும் கோவிலை பற்றி  பார்க்கலாம்...

கேரள மாநிலம் சிட்டிலன்சேரியில் அமைந்துள்ள நெட்டூரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று, கடவுளை வழிபட்டால் கெட்ட கனவுகள் வருவது நின்று விடுமாம்....

இதே போன்று நாக தோஷம் உள்ளவர்களும் இந்த கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இங்கு சென்று வந்தால்,நாக  தோஷம் நீங்கி திருமண தடை  நீங்கி,விரைவில் திருமணம்  நடைபெறுவது வழக்கம்

விக்னேஸ்வரர், சிவன், நவ கன்னிகைகள், ஐந்து தலை நாகம் உள்ளிட்டவை இந்த  கோவிலில் உள்ளது

கோவையில் இருந்து 264 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த  கோவில். கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், கொச்சின், ஆலப்புழா, கோட்டயம் வழியாக கோவிலை சென்றடையலாம்.

இதனை  தொடர்ந்து  பலரும்  இந்த  கோவிலுக்கு சென்று  வழிபட ஆர்வம் காட்டுகின்றனர்.