இதை மட்டும் செய்து பாருங்கள்..! வீட்டில் செல்வம் எப்படி சேருதுன்னு..! 
 
இன்றைய  சூழலில் யாருக்கு தான் கடன் இல்லை. கடன் என்பது எல்லோரும் பொதுவானதாக இருந்தாலும் எந்த அளவிற்கு கடன் சுமை உள்ளது. அதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் என்பது அனுபவித்த நபர்களுக்கே தெரியும். 

கடன் என்பது இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்கும் சொத்து. அது இல்லாமல் ஏழை, பணக்காரன் என யாரும் இல்லை. நாள்தோறும் கூலி வேலை செய்பவர்கள் முதல் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகள் வரை அனைவருக்கும் கடன் என்பது பொதுவானது. 

ஆனால், கடன் தொல்லை என்பது மெல்லக் கொல்லும் அது உயிரைக் கொல்லும், குடும்பங்களை சிதைக்கும்,கடன் தொல்லை என வந்துவிட்டால், மனதில் நிம்மதி இருக்காது. அவ்வாறு நிம்மதி இழந்து தவிப்பவர்கள், ஒரு எளிய பரிகாரத்தை செய்தால், கடன் தொல்லை நீங்கும். நாள்தோறும் காலையில் 6 மணிக்கு முன்பாக எழுந்து, குளித்துவிட வேண்டும். அப்போதுதான் வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

குளித்து முடித்தவுடன் நெய் தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தை வணங்கலாம். நெய் தீபம் ஏற்ற வழியில்லாவிட்டால், நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இறைவனிடம் பாகுபாடு இல்லை. இறைவனை முழு மனதோடு, மனமுருகி வேண்டிக் கொண்டு வழிபடுங்கள். மாலையில் சூரியன் மறையும் முன்னர், அதோபோல், தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். அதற்கு முன் யாராவது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தால், எழுப்பிவிடுங்கள். வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டுவது கூட இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காதீர். வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றவாறு உணவு தயாரியுங்கள்.

கூடுதல் உணவு இருந்தால், அதை ஏதாவது ஒரு நபரிடம் சேர்த்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் உணவை வீணாக்காதீர்கள். இறைவனை வணங்குவது மட்டுமல்லாமல், இதுபோன்ற நற்செயல்களாலும், இறைவனின் பார்வை நம் மீது விழும். அப்போது கடன் பிரச்சனை அகலும். செல்வம் பெருகும்.

இன்றளவும் நம் கிராமத்திற்கு சென்று பார்த்தால் ஒரு சில வீடுகளில், மாலை நேரத்தில் விளக்கேற்றும் போது சில விஷயங்களை கவனித்து  பாருங்கள். யாரையும் தூங்க விட மாட்டார்கள். நம் குடும்ப உறுப்பினர்  வெளியில் கிளம்பும் போது உடனே பெருக்க மாட்டார்கள்