இதை எல்லாம் செய்தால் வாழ்வு சிறப்பாக இருக்குமாம்..! 

நம் முன்னோர்கள் எதை சொன்னாலும், எதை செய்தாலும் அதற்கு பின் ஆழமான ஒரு அறிவியல் காரணம் உண்டு என்பதை நாம் உணர்ந்து உள்ளோம் அல்லவா..? 

அதில் ஒரு சில விஷயத்தை இங்கே பார்க்கலாம். நம்முடைய பழக்க வழக்கத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். 

விடியற்காலை 5 மணிக்கு விழித்தெழ வேண்டும். விழித்தவுடன் நம்மை தாங்கும் பூமி தாயை வணங்கி எழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 

தினமும் நீரால் உடல் சுத்தம் மிக அவசியம். வாரம் ஒருமுறை கட்டாயமாக தலை குளியலும் செய்தல் வேண்டும்.காலை மாலை இருவேளையிலும் தீபமேற்றி வீட்டின் முன் வாசலை திறந்து நிலையிலும் பின் வாசலை மூடிய நிலையிலும் வைத்தல் வேண்டும்

வீட்டில் இரு வேளைகளிலும் மணி சப்தத்துடன் கூடிய பூஜை செய்தல் வேண்டும். வாழை இலைகளில் உணவு பரிமாறும் போது உப்பிட்ட பதார்த்தங்களை நடு மட்டைக்கு மேலேயும், உப்பில்லாதவைகளை கீழேயும் பரிமாற வேண்டும். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது. ஆலய பிரசாதங்களை அலட்சியம் செய்வது கூடாது ஆலயங்களில் நுழைந்துவிட்டால் வீண் பேச்சுக்கள் மற்றும் அரட்டைகள் கூடாது

நமது கடமையை மற்றவர்களிடம் ஒப்படைக்க கூடாது. வயதானவரையும் நோய்வாய்ப்பட்ட வரையும் அலட்சியம் செய்தல் கூடாது. நகங்களை அளவுக்கு அதிகமாக வளர்த்தலும் அதனைப் பற்களால் கடித்து துப்பவும் செய்யக்கூடாது. 

இதன் மூலம் கண்களுக்கு புலப்படாத தேவையில்லாத கிருமிகள் பரவும்.வாங்கிய கடனை திருப்பி தராமல் ஏமாற்றக்கூடாது. இது போல ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக நம் வாழ்க்கையும் கடைபிடிக்க வேண்டும்