தலை முடி அதிக வறட்சியாக இருந்தால், தயிர் கொண்டு மசாஜ் செய்து வர, வறட்சி நீங்கி பொலிவாக காணப்படும். இதேபோன்று எலுமிச்சை சாறுடன் தயிரை சேர்த்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் மென்மையாக இருக்கும் பளபளப்பாக இருக்கும்.அதுமட்டுமல்லாமல் முடியும் நன்கு வளரும்.
பசங்களா ... உங்க கன்னம் ஷைனிங்கா இருக்கணுமா..? இன்னைக்கு நைட்டே இத செய்யுங்க...!
தயிரை சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் நம் சருமமும் சரி.. முடியும் சரி.. பளபளப்பாக காணப்படும். சரி வாங்க தயிரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
தலை முடி அதிக வறட்சியாக இருந்தால், தயிர் கொண்டு மசாஜ் செய்து வர, வறட்சி நீங்கி பொலிவாக காணப்படும். இதேபோன்று எலுமிச்சை சாறுடன் தயிரை சேர்த்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் மென்மையாக இருக்கும் பளபளப்பாக இருக்கும்.அதுமட்டுமல்லாமல் முடியும் நன்கு வளரும்.
மேலும் தயிருடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகம் மற்றும் நம் உடம்பில் கூட தடவி வந்தால் வெயிலினால் ஏற்படக்கூடிய சரும வறட்சி முற்றிலும் நீங்கும். முகப்பருக்கள் அதிகமாக உள்ள பெண்கள் தயிருடன் சிறிதளவு கடலைமாவு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வர பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.
இது தவிர மற்ற பல பயன்பாடுகளும் உண்டு
பொடுகு தொல்லை நீங்க..!
தலையில் உள்ள பொடுகை போக்க தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் இதேபோன்று தயிருடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வாருங்கள் அதனை காய்ந்ததும் கழுவினால் வறண்ட சருமம் பளிச்சென்று மாற வைக்கும்.
மேற்குறிப்பிட்ட இந்த டிப்ஸ் கடைபிடித்தாலே போதும் நம் சருமம் மற்றும் தலைமுடியை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
ஆனால் நாம் எப்போதுமே அழகான பாட்டிலில் கிடைக்கக்கூடிய முழுக்க முழுக்க கெமிக்கல் பொருட்கள்தான் நம் மக்களுக்கு பிடிக்கும். ஆனால் இனியாவது நம் வீட்டில் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் தயிரை கொண்டே நல்ல பலனை பெறலாம்
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 18, 2020, 7:24 PM IST