அடிக்கடி உங்கள் முன் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? உடனே இதை செய்யுங்க..! 

வீட்டில் திருஷ்டி அகல வேண்டும் என்றால் கள்ளிசெடி கட்டினால் போதுமானது. நம் வீட்டில் சோற்று கற்றாழை வளர்த்தால் மருத்துவர் ஒருவர் நம் வீட்டில் இருப்பதற்கு சமம் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது சோற்றுகற்றாழை.

கோவில்கள் 

கோவில் என்பது கடவுள் குடியிருக்கும் ஓர் இடம். பக்தர்கள் வேண்டுவது எல்லாம் வரமாக பெற  கூடிய அற்புதமான இடம். இந்த இடத்தில் சாப்பிடுவது, தூங்குவது, தேவையற்றவை பேசுவதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் பேசிக்கொண்டோ,தூங்கினாலோ பாவம் வந்து சேரும் என்பது ஐதீகம். அதன் விளைவாக மறுபிறவியில் துன்பப்பட நேரிடும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

காகம்

வெளியில் செல்லும் போதோ அல்லது உங்கள் கண்களில் அடிக்கடி ஒரு விஷயம் தென்படுகிறது என்றால் நம்மை மீறி நமக்குள் அந்த ஒரு விஷயம் உட்புகும் அல்லவா? அந்த வகையில் அடிக்கடி காகம் நம்மை தீண்டினால் என்னவாக இருக்கும்? என நாம் சிந்திப்போம் அல்லவா? இதுபோன்ற தருணத்தில் பிதுர் தோஷம் அல்லது சனி தோஷம் இருந்தால் தான் அப்படி நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

இதற்காக சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்த ஒன்று. அதேபோன்று ஏழை எளிய மக்களுக்கு வயிறார உணவளித்து மனதார வாழ்த்துக்கள் பெறுவது நல்லது