திருமணமான பெண் இறந்தால் யார் வாரிசு தெரியுமா..? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! 

திருமணமான பெண் இறந்தால் அப்பெண்ணின் தாய் சட்டபூர்வமாக வாரிசாக முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணா என்பவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இறந்தபின் வாரிசு சான்றிதழில் அவரது தாயார் பெயர் இருந்துள்ளது .

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயலட்சுமியின் கணவர் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவகார்த்திகேயன் திருமணமான ஆண் இறந்துவிட்டால் அவரது குழந்தை மனைவி அவரது தாய் இவர்கள் சட்டபூர்வமாக வாரிசுகளாக கருதப்படும்.

ஆனால் திருமணமான பெண் இறந்தால் அவரது கணவர் குழந்தைகள் மட்டுமே சட்டபூர்வ வாரிசாக முடியும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜயலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததோடு அவரது பெயரை நீக்கி பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் புதிய வாரிசு சான்றிதழை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. இதனால் இதுவரை இருந்து வந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டு உள்ளது.