பெற்றோர்களே...! குழந்தைகளின் ஒட்டுமொத்த பாதிப்புக்கு காரணம் என்னென்னே தெரியுமா..?

நம் வீட்டு குழந்தைகள்,அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள்...இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் துரு துரு நடவடிக்கை,திறமை,புத்திசாலித்தனம் அனைத்தும் நம்மை வெகுவாக கவரும் என்பதில் எந்த மாற்றம் இல்லை..

அவர்கள் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை ஸ்மார்ட்டாக பயன்படுத்துவதை   பார்த்து பெற்றோர்களாகிய நம்மவர்கள் ஜாலியாக சிரிப்பார்கள்..

இன்னும் சொல்லப்போனால்,எப்படி எல்லாம் பயன்படுத்துகிறான் என் குழந்தை என மற்றவரிடம் கூட சொல்லி புகழ் பாடுவதை பார்த்து இருப்பீர்கள்...

இதுபோன்று,கணினியையும்,செல்போனையும் அதிக நேரம் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்னை வரும் என்பதை பாருங்கள்...

தாமதமாக பேசுதல்

கவனக்குறைவு மற்றும் கவன சிதறல்

கற்றல் பிரச்சனைகள்

காரல் திறன் குறைபாடுகள்

உறக்கமின்மை

தேவையற்ற பதற்றம்

தேவையற்ற பயம்

மனசோர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சனையும் வரும்...

நம் குழந்தைகள் படிக்கவில்லை என்றாலும்,அவர்கள் நல்ல மன தைரியத்துடன்,எதையும் சிந்தித்து 

செயல்பட வேண்டும் என்று தான் நினைப்போம்.முதலில் குழந்தைகளின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துவோம்...

ஆனால்,அதிக நேரம் போன் பயன்படுத்துவது, கண் குறைபாடு முதல் உடல்  ஆரோக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும்...

எனவே குழந்தைகளிடம் அதிக நேரம் போனை கொடுக்காமல் இருப்பது நல்லது