IF a man can cry?

டென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவாராம். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் .

நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகைகாண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”ஆனால் இந்த உணர்வை அவர்கள் மறைக்கிறார்கள்.

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்ல செயல் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள் கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.

கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

அடிப்படை கண்ணீர் இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோவருவது இந்தவகைக் கண்ணீர்.

முக்கியமானது மூன்றாவது கண்ணீர் உணர்வுசார் கண்ணீர்:பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.
ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் அடிக்கடி அழுகிறார்கள்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான்.

உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள்இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். அழுகையோ,சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். ஆனால்.

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.மிக நெருங்கியவர்களின் மரணம்,காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.

ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதற்கு என்றும் அழும் ஆண் உண்மையானவன் என்றும் கூறுகிறார்கள்.

ஆண் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்று பலர் கூறுகிறார்கள்.

அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று பல ஆண்கள் கூறுகிறார்கள். 

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா ?

உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவதுசரியான செயல் அல்ல என்கிறார்கள் வல்லுனர்கள்.

அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.

இதற்காக ஆண்கள் அழுதுகொண்டே இருக்கவும் வேண்டாம்.