இட்லி ஸ்டாண்டை சுத்தம் செய்ய சிரமப்படுறீங்களா? அப்ப இந்த சிம்பிள் டிப்ஸ்களை ட்ரை பண்ணுங்க!
இட்லி பாத்திரத்தில் உள்ள ஸ்டாண்டை சுத்தம் செய்வதில் சிக்கல் உள்ளதா? அதை எளிதாக சுத்தம் செய்ய உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன..
"இட்லி" தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவரும் விரும்பின் சாப்பிடும் ஒரு காலை உணவு ஆகும். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். வீட்டிலேயே இட்லி செய்வது மிகவும் எளிதானது என்றாலும், அதன் பிறகு இட்லி பாத்திரத்தை கழுவுவது, குறிப்பாக இட்லி ஸ்டாண்டை சுத்தம் செய்வது மிகவும் கடினம். பல நேரங்களில் நாம் ஸ்டாண்டை சுத்தம் செய்வதில் சிரமப்படுகிறோம். மேலும் சிலர் ஸ்டாண்டை சுத்தம் செய்வதில் சிரமப்படுவதால் அவற்றை அப்படியே கழுவாமல் வைத்து விடுகின்றனர். இதனால் அவை காய்ந்து விடுகிறது.
அத்தகைய சூழ்நிலையில், காய்ந்த ஸ்டாண்டை சுத்தம் செய்வது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் இன்று நாங்கள் உங்களுக்கு சில எளிய உதவிக்குறிப்புகளைச் சொல்லப் போகிறோம், அதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இட்லி ஸ்டாண்டை எளிதாக சுத்தம் செய்யலாம்.
இப்படி ஆரம்பியுங்கள்:
முதலில், ஸ்டாண்டை சுத்தம் செய்வதற்கு முன் அது எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். அது ரொம்ப அழுக்காக இருந்தால், அதை வெந்நீரில் சுமார் அரை மணி நேரம் ஸ்டாண்டை ஊற வைக்க வேண்டும்.. இவ்வாறு செய்வதன் மூலம் படிந்திருக்கும் அழுக்கு சுலபமான முறையில் நீங்கும்.
இதையும் படிங்க: கிச்சன் சிங்க் நாற்றத்தை போக்க சில சூப்பரான டிப்ஸ்கள் இதோ..!!
பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் பயன்படுத்தவும்:
ஸ்டாண்ட் அல்லது மேக்கரை சுத்தம் செய்ய நீங்கள் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம், ஏனெனில் எண்ணெய் உடனடியாக அழுக்குகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் எளிதாகவும் சுத்தம் செய்யும். சுத்தம் செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.
இதையும் படிங்க: பாத்திரங்களை சுத்தம் செய்த பின் கண்டிப்பாக இத செய்யுங்கள்...அப்போ தான் பாக்டீரியாக்கள் அழியும்.!
எப்படி சுத்தம் செய்வது?
முதலில், ஒரு கிண்ணத்தை எடுத்து எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடாவை கலக்கவும். இப்போது இந்த கலவையை ஒரு துணியின் உதவியுடன் எடுத்து ஸ்டாண்ட்டை சுத்தம் செய்யவும். குறிப்பாக இவற்றை நீங்கள் சுத்தம் செய்யும் போது எண்ணெயின் அளவு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
துருவை எப்படி சுத்தம் செய்வது?
அடிக்கடி தண்ணீரைக் கொண்டு ஸ்டாண்டை கழுவி ஒழுங்காக காய வைக்காமல் இருந்தால் அவை எளிதில் துருப்பிடிக்க ஆரம்பத்துவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், துருவை சுத்தம் செய்ய, முதலில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் அம்மோனியாவை சேர்த்து கலவையை தயார் செய்யவும். இப்போது இந்த கலவையை தயார் செய்த பிறகு, அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, ஸ்டாண்டைச் சுற்றி நன்கு தெளித்து சிறிது நேரம் விடவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பிரஷ் அல்லது ஸ்க்ரப்பர் உதவியுடன் தேய்த்து சுத்தம் செய்யவும். இந்தக் கலவையைக் கொண்டு ஸ்டாண்டை சுத்தம் செய்த பின் தண்ணீர் சேர்த்து நன்றாக சுத்தம் செய்யவும்.
முக்கிய குறிப்பு: இட்லி பாத்திரத்தை சுத்தம் செய்த பிறகு, உடனடியாக கேஸ் ஸ்டவில் வைத்து பயன்படுத்த வேண்டாம். நன்கு காய்ந்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.