ideas for ministers to tackle the chennai rainy situation
சென்னைல வெள்ளம் வா்றதைப் பத்தி கூட பயம் இல்ல... ஆனா அந்த வெள்ளத்துல இருந்து மக்களை காப்பாத்த அமைச்சா்கள் தரப் போற ஐடியாக்கள நெனச்சாதான் ஈரக் கொலையே நடுங்குது!
இதுதான் இப்போதைய சமூக வலைத்தளங்களில் ஹாட் ட்ரெண்ட். இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.
ஜெயலலிதா இருந்தவரை, தான் ஒருவரே எல்லாம் என்று தமிழகத்துக்குக் காட்டினார். அமைச்சர்கள், கட்சியினர் எவரையும் மேடை ஏற்றிப் பேச விட்டதில்லை. எனவே, எவர் குறித்தும் பொதுமக்களுக்கு அவ்வளவாக தெரியவுமில்லை.
ஆனால், ஜெயலலிதா மரணித்த பிறகு, அதிமுக., தலைவர்கள், குறிப்பாக அமைச்சர்களின் செயல்பாடுகளும் பேச்சுகளும் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல, நகைப்புக்குரியதாகவும் ஆகிவிட்டன. செல்லூர் ராஜூ வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்க மேற்கொண்ட தெர்மகோல் வைத்தியமாகட்டும், நொய்யலாற்றில் மிதந்து வந்த நுரைகள் எல்லாம் கோவை மக்கள் போட்ட சோப்புத்தண்ணி என்ற அமைச்சர் பெருமகனாரின் கருத்தாகட்டும்... இப்போது எல்லாமே நொந்து போய் இருக்கும் மக்களுக்கு அமைச்சர்கள் அளிக்கும் நகைச்சுவை விருந்தாகிவிட்டது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்தான் அமைச்சர்கள் வரிசையில் இப்போதைய முதல் நகைச்சுவை மன்னராகத் திகழ்கிறார். அவருடைய ஐயா... எங்கள மன்னிச்சுருங்கய்யா... குரல் இப்போதெல்லாம் பலரது கனவிலும் வந்து டிஸ்ட்ரப் செய்யும் குரலாகிவிட்டது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக சென்னையில் பெய்த பெருமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த ராசி, சென்னையில் இன்று வெயில் காயத் துவங்கியிருக்கிறது. இதுதான் தமிழக அரசின் ராஜதந்திர நடவடிக்கை என்று கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த அறிவிப்பால், பிள்ளைகள் வீட்டில் அடிக்கும் லூட்டி தாங்கவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளும் மகளிர் மாமணிகளும் சோஷியல் மீடியா ஐடியா சிகாமணிகளும், இதற்காக அமைச்சர்களுக்கு இப்படி ஐடியா கொடுக்கிறார்கள்.
மழை அபாயம் இருக்கும் நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டு மழையை ஒருபக்கம் ஏமாற்றலாம்.
குறுஞ்செய்தி உள்ளிட்ட ரகசிய அறிவிப்புகளை வீட்டுக்கு அனுப்பி இன்னொரு பக்கம் பள்ளிகளை இயக்கலாம்.
மழை அபாயமும் நீங்கும். பிள்ளைகளின் படிப்பும் பாழாகாது... என்று இப்போது ஐடியா கொடுப்பது அமைச்சர் வேலுமணிக்கு!
அட ஆமாம்! சென்னைல வெள்ளம் வா்றதைப் பத்தி கூட பயம் இல்ல...
ஆனா அந்த வெள்ளத்துல இருந்து மக்களை காப்பாத்த அமைச்சா்கள் தரப் போற ஐடியாக்கள நெனச்சாதான் ஈரக் கொலையே நடுங்குது!
