ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்த ஒரு சில இணைய தளத்திற்கு இந்தியாவில் தடைவிதித்திருந்தாலும் ஒருசில செயலி மூலம் ஆபாச வீடியோக்களை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர் தேவைப்படுவோர்.

இந்நிலையில் பிரிட்டனில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளத்தை முடக்கவும் மற்றும் உரிய அனுமதியோடு நடத்தும் இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்க்க விரும்புவோரின் வயதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது வயதை உறுதி செய்ய வேண்டும் என்றால் அதில் காண்பிக்கப்படும் 18 வயது நிரம்பியவர் என்ற கேள்வியோ..ஆணா பெண்ணா என்ற கேள்வியோ அல்ல. இதற்கு மாறாக அவர்களுடைய பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, டிஜிட்டல் ஐடி ஆகியவற்றை பயன்படுத்தி அவர்களுடைய வயதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிமுறை வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 18 வயதிற்கு குறைவானவர்கள் இதுபோன்ற ஆபாச இணையதளத்தை பார்க்க முடியாமல் தவிர்க்க முடியும். இதனை தவிர்ப்பதற்காக அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்திற்கு அந்நாட்டு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். உலக மக்களும் அந்தந்த நாட்டில் இதுபோன்ற சட்ட திருத்தம் வரவேண்டும் என ஆதரவு குரல் கொடுத்து உள்ளன.ர் குறிப்பாக இந்தியாவில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.