கொரோனா தடுப்பூசி, இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முதல் தடுப்பூசி, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- பிரதமரின் முயற்சியால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்க கோவிஷீல்டு மருந்து 5,36500 டோஸ்களும், கோவாக்சின் 20 ஆயிரம் டோஸ்களும் என மொத்தம் 5,56,500 டோஸ்கள் வந்துள்ளது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

அனைவரையும் காப்பாற்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நானும் தடுப்பூசி போட்டு கொள்வேன். தடுப்பூசி போடுவதற்கு 266 இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்டு, 166 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசியை முதலில் டாக்டர்கள் தான் போட்டு கொண்டனர். இதனால், தடுப்பூசி தொடர்பான அச்சம் விரைவில் சரியாகிவிடும் என்றார். கொரோனா தடுப்பூசி, இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.