செம மாஸா வெளியான பேட்டரி கார்..! இனி சென்னையில்... முழுமூச்சா திறந்து வைத்த முதல்வர் ...!

சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு வாகனங்களின் தயாரிப்பை உறுதி செய்ய உலக நாடுகள் போராடி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் அதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 7000 கோடியில் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்த புதிய ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதில் பேட்டரியில் இயங்கும் கூடிய கார்கள் தயாரிக்கும் திட்டமும் ஒன்று.

இதனை தொடர்ந்து தற்போது ஹூண்டாய்  நிறுவனம் 600 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரி காரை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து ரீசார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் வரை இந்த பேட்டரி கார் மூலம் பயணம் மேற்கொள்ள முடியும். இதில் மிக சிறப்பான விஷயம் என்னவென்றால் சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் பேட்டரி கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகத்தில் 2000 பேட்டரி பேருந்துகளை விரைவில் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது கூடுதல் தகவல். இந்த நிலையில் புதிய பேட்டரி  கார்களை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகப்படுத்தியுள்ளார்.