ட்விட்டரில் தெறிக்கவிடும் #....! உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பாராட்டு...! 

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு நாடு முழுக்க பெரும் ஆதரவு கிடைத்து உள்ளது. தற்போது என்கவுண்டர் என்ற ஒருங் வார்த்தை தான் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது 

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். இக்கொடூர கொலை வழக்கில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது

இது தொடர்பபான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்ற போது அவர்கள் 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். அதாவது விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே நான்கு பேரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் என்கவுண்ட்டர் செய்ததற்காக சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரை மக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர். இந்த ஒரு நிலையில் என்கவுண்டர் செய்தது மிக சரியே என பொதுமக்கள் அவர்களது முழு ஆதரவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.