முத்தலாக் கூறி விவாகரத்து செய்ய மனைவியை முஸ்லிமாக மதம் மாற அழுத்தம் கொடுத்து உள்ள கணவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது போலீஸ்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. ஹஜாரி பஜான் என்ற பகுதியில் வசித்து வந்த வாலிபர் ரம்ஜான் அன்சாரி என்பவர் லாரி ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அடிக்கடி லாரியில் பொருட்களை எடுத்து செல்வார்.

அப்போது உத்திரபிரதேசத்தில் மனிஷா என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டு தன்னை ஓர் இந்து எனக்கூறி பெயர் அகிலேஷ்யாதவ் எனவும் தெரிவித்துள்ளார். பின்னர் அங்குள்ள ஜான்சி என்ற கோவிலில் மனிஷாவை ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தற்போது மூன்று வயதில் குழந்தையும் உள்ளது. இரண்டாவதாக தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் தன்னுடைய கணவர் இந்து அல்ல என்றும், ரம்ஜான் அன்சாரி என்பதுதான் அவருடைய உண்மையான பெயர் என்பதையும் தெரிந்துகொண்ட மனிஷா அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனையெல்லாம் தவிர்த்து, பெரும் அதிர்ச்சியாக ஏற்கனவே வேறு ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே தொடர்ந்து மனிஷாவிற்கும், ரம்ஜான் அன்சாரிக்கும் கடும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவாகரத்து செய்ய முடிவெடுத்த ரம்ஜான் அன்சாரி மனிஷாவை முஸ்லிமாக மதம் மாற்றி, பின்னர் மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்யலாம் என சதித்திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படியே மனிஷாவை முஸ்லிமாக மாற்றி முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்துள்ளார். பின்னர் மனீஷாவை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். குழந்தையுடன் ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ள மனிஷா தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அன்சாரி மீது வழக்கு எதுவும் பதியப்படாமல் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முத்தலாக் முறை மீதான வழக்கில் அதை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 17 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தடைசெய்யப்பட்ட முத்தலாக் முறையை பயன்படுத்தி ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக, ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மாற்றி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்ட ரம்ஜான்அன்சாரியை போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.