நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவனை போலீசார் கையும் களவுமாக வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. கருத்து வேறுபாடு விவாகரத்து கோரி வரலட்சுமி மற்றும் சரவணன் தம்பதியினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின்போது நீதிபதி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அப்போது தன் மனைவி மீது கருத்து வேறுபாடு காரணமாக மிகுந்த கோபத்துடன் இருந்த சரவணன் நீதிமன்ற வளாகத்திலேயே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சரவணனை பாதுகாப்பு போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவரை கைது செய்த போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஒரு நீதிபதியின் கண்முன்னே நீதிமன்ற வளாகத்திலேயே தன் மனைவியை கத்தியால் குத்திய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.