மனைவிக்காக பொதுவெளியில் கணவர் செய்த காரியம்..! ட்ரெண்டாகும் வைரல் புகைப்படம்..!  

நிறைமாத கர்ப்பிணிக்கு அமர இடம் கிடைக்காதலால் கணவர் தனது முதுகை நாற்காலியாக பயன்படுத்திய நிகழவை கண்டு பொதுமக்கள் தங்களது பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த  நிகழ்வு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில் நடைப்பெற்று உள்ளது 

அதாவது தன்னுடைய நிறைமாத கர்ப்பிணியை அழைத்துக்கொண்டு, கணவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மேலும் பல நபர்கள் காத்திருந்ததால் அவர் அமர இருக்கை கிடைக்கவில்லை. நீண்ட நேரம் நின்று பார்த்து உள்ளார். இருந்த போதிலும் யாரும் எழுந்தபாடு இல்லை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவருக்கு அதிக கால் வலி ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகி உள்ளார் மனைவி.

இந்த ஒரு தருணத்தில் தான் என்ன செய்வது என நினைத்த கணவர் உடனடியாக தரையில் அமர்ந்து தன் முதுகை நாற்காலியாக நினைத்து அமருமாறு மனைவியிடம் கேட்க மனைவியும் அப்படியே அவருடைய முதுகில் அமர்ந்து சற்று ஓய்வு எடுக்கிறார். இந்த ஒரு காட்சி அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால் அது குறித்த புகைப்படம் யாரோ ஒருவர் சமூக வலைத் தளத்தில் பதிவிட தற்போது உலக அளவில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் தன் மனைவி மீதான அக்கறையை இந்த கணவர் எப்படி எதிர்கொள்கிறார் என்று  அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. நாம் வாழும் இந்த உலகில் மனித நேயமிக்க மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி அவ்வப்போது ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது இது போன்ற நிகழ்வுகள்